For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்த இரு பெண்களுக்கும் உதவுங்களேன்!

டீனேஜ் வயதை ஜாலியாக கழிக்க வேண்டிய 14 வயது இளம்பெண் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சிகிச்சையளிக்க உதவி கேட்டு சமூக ஊடகங்களை நாடியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : 14 வயது ரோஷினி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்து செலவிற்காக உதவி கேட்டு கிரவுட்ஃபண்டிங்கை நாடியுள்ளார். இதே போன்று ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சுதந்தரதேவியும் கிரவிட்ஃபண்டிங்கை நாடியுள்ளார்.

டீனேஜ் பருவம் என்பது குழந்தைகள் கவலைகளின்றி ஜாலியாக கழிக்க வேண்டிய பருவம். ஆனால் 14 வயது ரோஷினிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. குழந்தைகள், டீனேஜ் பெண்களை தாக்கும் லிம்போபிளாஸ்டிக் லிம்ப்போமா என்ற ஒரு வகை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் ரோஷினி.

சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரோஷினிக்கு இரண்டறை ஆண்டுகள் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்காக சுமார் ரூ.10 லட்சம் வரை நிதியுதவி தேவைப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிதியுதவி கோரும் ரோஷினி

நிதியுதவி கோரும் ரோஷினி

ரோஷினியின் மருத்துவ செலவிற்காக அவருக்காக milaap.org மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த இளம்பெண்ணின் உயிரைக் காப்பாற்ற அவர்களால் ஆன உதவியை செய்யலாம் என்றும் விளக்கம் கேட்க விரும்புவோர்களுக்கு 9677989830 தொலைபேசி எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது.

ரத்தப்புற்று நோயால் பாதிப்பு

ரத்தப்புற்று நோயால் பாதிப்பு

இதே போன்று 32 வயது சுந்தரதேவி என்ற பெண் ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்காக அவருடைய சகோதரி மைலேப் மூலம் கிரவுட்ஃபண்டிங்கை தொடங்கியுள்ளார். நடுத்தர வரக்க குடும்பத்தை சேர்ந்த சுந்தரதேவியின் தாயார் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார், தந்தை பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளெர்க் போஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். மற்றொரு சகோதரி வங்கியில் கிளர்க் பதவியில் உள்ளார். அவரது வருமானத்தில் தான் தற்போது குடும்பம் ஒடிக்கொண்டிருக்கிறது.

நிதி போதவில்லை

நிதி போதவில்லை

இந்நிலையில் சுதந்தர தேவிக்கு ரத்தக்புற்றுநோக்கான கீமோதெரபி சிகிச்சை அளிக்க ரூ.15 லட்சம் வரை நிதி தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருந்த சேமிப்பகளை வைத்து 25 சதவீதம் மட்டுமே நிதி திரட்ட முடிந்தததால் சுதந்தரதேவியின் தங்கை மைலேப் நிதிதிரட்டல் இணையத்தில் தனது சகோதரிக்காக நிதி திரட்டி வருகிறார்.

மக்களிடம் உதவி கேட்பு

மக்களிடம் உதவி கேட்பு

இந்த நிதி திரட்டலுக்கு பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்ய வேண்டும் என்று அவர் உருக்கமாக கேட்டுள்ளார். மேலும் நிதியுதவி செய்ய முடியாவிட்டாலும் இந்தத் தகவலை மற்றவர்களுக்குத் தெரியபடுத்தி உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் https://milaap.org/payments என்ற இணையதளத்தை பயன்படுத்தி அதில் வரும் விதிமுறைகளை பின்பற்றி நிதியுதவி செய்யலாம்.

English summary
Relatives and family memebers of Cancer affected patients 14 years Roshini and 32 years old Sudhandhra Devi are in a fund requirement for cancer treatment. So they seeks help through crowd funding
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X