தேமுதிகவால் வந்த கூட்டணி பிரச்சனை.. விசிக, காங்கிரஸ் கொடுத்த புகைச்சல்.. திமுக தோல்வியின் பின்னணி
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட விரிசல் தான் என்பது தெரிய வந்துள்ளது. தேர்தல் அரசியலில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இடையே உள்ள பிணைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
திமுக அமைத்துள்ள மெகா கூட்டணிகள் எப்போதுமே கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கிடையே எந்தவித சலசலப்பு ஏற்பட்டது கிடையாது. ஆனால் முதல் முறையாக 2026 தேர்தலுக்கு முன் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டது.

முதலில் இதை காங்கிரஸ் கட்சி தான் தொடக்கி வைத்தது. தங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் துணை முதல்வர் அல்லது அமைச்சர்கள் பதவி வேண்டும் என்று போர் கொடி தூக்கினார்கள். இது அமைதியாக இருந்த கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும் இதற்கு வாய்ப்பே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த தருணத்தில் தான் திமுக கூட்டணிக்கு புதிய கட்சியாக தேமுதிக அடியெடுத்து வைத்தது. இதன் மூலம் மற்ற கட்சிகளுக்கான இடம் குறைவாக வழங்கப்படும் என்று திமுக தலைமை அறிவித்தது. இது மற்ற கட்சி தொண்டர்களுக்கு இடையே கோபத்தை உருவாக்கியது. காங்கிரஸ் தங்களுக்கு 40 தொகுதி வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் தங்களுக்கு இரட்டை இலக்கத் தொகுதி வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தங்களுக்கு கடந்த ஆண்டு தேர்தலை விட கூடுதல் தொகுதி வேண்டும் என்றும் போர் கொடி தூக்கினார்கள்.
ஆனால் அவர்களை எல்லாம் பல கட்ட பேச்சு வார்த்தை பின் குறைந்த தொகுதிகளில் கொடுத்து திமுக சமாளித்தது. இது அக்கட்சித் தொண்டர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. இதனால் சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாகவே விசிக, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திமுகவை விமர்சித்து வந்தனர்.
இதனால் தேர்தலை சந்திப்பதற்கு முன்பே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக விசிகவினர் தாங்கள் நிற்கும் எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் மட்டும் போதும் என்றும் மற்ற இடத்தில் விஜய்க்கு ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவில் இருந்தனர். இது தேர்தலில் தற்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை தனது கட்சி தொண்டர்கள் கூட்டணி கட்சியினருக்கு சரியாக வேலை செய்யவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். இதேபோன்று காங்கிரஸ் கட்சியினரும் திமுகவுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தோணியில் செயல்பட்டனர். இதுதான் தற்போது தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்திருக்கின்றது.
-
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன்












Click it and Unblock the Notifications