Ajithkumar: "மை டியர் தளபதி".. விஜய்க்கு வாழ்த்து சொன்ன அஜித்
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தவெக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. விஜய் அவர் போட்டியிட்ட இரண்டு பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் விஜய்க்கு, அஜித் செல்போனில் வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடினர். தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டினார்கள். தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தவெக வேட்பாளர்கள் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னலை வகிக்கிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல முன்னாள் அமைச்சர்க்ள அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளனர். விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்து என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கூறியுள்ளார். திரைத்துறையில் இருந்தும் பல பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, சிவகார்த்திகேயன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர் அஜித்குமார் செல்போன் மூலம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இருவரும் செல்போனில் உற்சாகமாக பேசியுள்ளனர். சினிமாவில் விஜய், அஜித் இடையே தான் போட்டி நிலவும். விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் அதிமுக, பாஜக, திமுக தரப்பில் அஜித் ரசிகர்களின் வாக்குகளை கவர்வதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அது நடைபெறவில்லை. சினிமாவில் போட்டியை கடந்து விஜய், அஜித் நட்புணர்வுடன் பழகுவார்கள்.
அதேபோல விஜய் வெற்றி பெற்றதும் அஜித் உடனடியாக செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியிருப்பது இரண்டு ரசிகர்களிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications