மீண்டும் தோல்வி சுழலில் தமிழிசை.. மயிலாப்பூரில் மலராத தாமரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2006 முதல் தொடர்ந்து தேர்தல் களத்தில் இருந்தும் வெற்றியைத் தொட முடியாத பாஜக நிர்வாகி தமிழிசை செளந்தரராஜன், இந்த முறை மயிலாப்பூரிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பல தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும் மீண்டும் களமிறங்கிய அவர், இத்தேர்தலிலும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் பாஜக தனது அடித்தளத்தை வலுப்படுத்த பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சிகளில் முக்கிய முகமாக இருந்து வந்தவர் தமிழிசை செளந்தரராஜன். கட்சியின் மாநிலத் தலைவராகவும், தேசிய மட்டத்திலும் செயலில் இருந்த அவர், தேர்தல் அரசியலில் தொடர்ந்து தனது வாய்ப்புகளை சோதித்து வந்தார்.

Tamilisai Soundararajan

2006 முதல் சட்டமன்றமும், நாடாளுமன்றமும் என பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டாலும், வெற்றி மட்டும் அவரைத் தொட்டதில்லை. இருந்தாலும், கட்சிக்குள் அவருக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் குறையவில்லை. இதன் விளைவாகவே அவர் தெலங்கானா ஆளுநராகவும், பின்னர் புதுச்சேரி துணை ஆளுநராகவும் பொறுப்பேற்றார்.

ஆளுநர் பதவியை விட்டு மீண்டும் நேரடி அரசியலுக்கு திரும்பிய தமிழிசை, இந்த முறை வெற்றியைப் பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், மயிலாப்பூர் தொகுதியிலும் எதிர்பார்ப்பு நிஜமாகாமல் போனது.

2006 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம், நாடாளுமன்றம் என பாஜக நிர்வாகி தமிழிசை செளந்தரராஜன் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வரும் நிலையில், இதுவரை எந்தவொரு தேர்தலிலும் அவர் வெற்றி பெறவில்லை. 2019 ஆம் ஆண்டில் தூத்துக்குடி தொகுதியில், திமுக எம்பி கனிமொழியை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசை களமிறங்கினார். ஆனால், அந்த தேர்தலில் கனிமொழியே வெற்றிக் கனியைப் பறித்தார்.

இதையடுத்து, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழிசை தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றார். 2021 இல் புதுச்சேரி துணை ஆளுநர் பதவியையும் கூடுதல் பொறுப்பாக பார்த்தார். இதைத்தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார். சென்னை தெற்குத் தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்த தேர்தலில் தமிழிசைக்கு மயிலாப்பூர் தொகுதி வழங்கப்பட்டது. ஆனால், அந்த தொகுதியில் தவெகவை சார்ந்த வெங்கட்ராமன் வெற்றி பெற்றுள்ளார். திமுகவை சேர்ந்த த.வெலு 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். தமிழிசை மூன்றாம் இடத்திற்கு பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+