ஈரோட்டில் பதுங்கியிருக்கும் ரவுடி பினு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: சென்னையில் இருந்து தப்பியோடிய ரவுடி பினு ஈரோட்டில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் அட்டூழியம் செய்து வந்த ரவுடி பினுவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த ரவுடிகளை போலீசார் சினிமா பாணியில் கைது செய்தனர். மலையம்பாக்கத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கலந்து கொண்டனர்.

Rowdy Binu takes shelter in Erode?

பயங்கர ஆயுதங்களுடன் இருந்த ரவுடிகளை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். ஆனால் பினு, கனகு, விக்கி ஆகிய 3 பேர் மட்டும் தப்பியோடிவிட்டனர்.

அவர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பினு ஈரோட்டில் பதுங்கியிருக்கக்கூடும் என்று தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் ஈரோட்டில் உள்ள விடுதிகளில் பினுவை தேடி வருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police are checking all hotels and lodges in Erode after they suspect that Rowdy Binu might be hiding somewhere there. Binu managed to escape when police arrested a gang of rowdies in Chennai on his birthday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற