ரவுடி பினு போட்டுத் தள்ள பிளான் செய்த ராதாகிருஷ்ணன் சேலம் நீதிமன்றத்தில் சரண்
ரவுடி பினு கொலை செய்யத் திட்டமிட்டுருந்த ராதாகிருஷ்ணன் இன்று சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சேலம் : கடந்த வாரம் போலீஸில் சரணடைந்த ரவுடி பினுவின் எதிர்கோஷ்டியைச் சேர்ந்த பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் போலீஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, போலீஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரவுடி பினு கேக் வெட்டிய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அதிரடியாகச் செயல்பட்டு அங்கிருந்து 76 ரவுடிகளைக் கைது செய்தனர்.

ரவுடி பினு அங்கிருந்து தப்பித்த நிலையில் சில தினங்களுக்குப் பிறகு போலீஸில் சரணடைந்தார். பினுவின் எதிர்க்கோஷ்டியைச் சேர்ந்த ரவுடி ராதாகிருஷ்ணன் போட்டுத்தள்ள ரவுடிகள் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து தலைமறைவான ரவுடி ராதாகிருஷ்ணனையும் போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். அவர் மீது 9 கொலை வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், எப்படியாவது கைது செய்து விடவேண்டும் என்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ரவுடி ராதாகிருஷ்ணனை சுட்டுப்பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தகவலை தெரிந்து கொண்ட ராதாகிருஷ்ணன் இன்று சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனையடுத்து சென்னை போலீஸார் சேலம் விரைந்துள்ளனர். ரவுடி ராதாகிருஷ்ணன் 35 வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications