காஞ்சிபுரத்தில் ரூ.4 கோடி நிலம் அபகரிப்பு...சசிகலா, தினகரன் மீது புகார்
போலி ஆவணங்களை தயார் செய்து ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக சசிகலா மற்றும் தினகரன் மீது அளித்த புகாரின்பேரில் காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம்: போலி ஆவணங்களை தயார் செய்து ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக சசிகலா மற்றும் தினகரன் மீது அளித்த புகாரின்பேரில் காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், சிறுதாவூர் கிராமத்தில் விமானப் படை பிரிவில் பணி செய்து ஓய்வு பெற்றவர் கண்ணன். இவர் மனைவி விஜயலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் சிறுதாவூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை பத்தாண்டுகளுக்கு முன் பரணி பீச் ரிசார்டு இயக்குநர்களான சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறுகின்றனர்.
எனவே கடந்து நான்கு தினங்கள் முன்பு சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்ததை தொடர்ந்து அந்த புகார் மீது விசாரணை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பபட்டது.
இதில் கண்ணனுக்கு சம்மன் அனுப்பபட்டதை தொடர்ந்து எஸ்பி அலுவலகம் வந்து தன் தரப்பு நியாயத்தை எடுத்து கூறியுள்ளார். மேலும் இரு தரப்பிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications