For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை... பட்டப்பகலில் துணிகரம்

Google Oneindia Tamil News

வத்தலக்குண்டு : திண்டுக்கல் அருகே மணப்புரம் தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனத்தில் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், மற்றும் 17 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனத்தில் வத்தலக் குண்டு, தேவதானப்பட்டி, நிலக்கோட்டை, கெங்குவார் பட்டி, பட்டிவீரன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் நகைக்கடன் வாங்கியுள்ளனர்.

manapuram roberry

தேனி-மதுரை பிரதான சாலையில் உள்ள இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று காலை 10 மணிக்கு பணிக்கு வந்தனர். சிறிது நேரத்தில் 6 பேர் அந்நிறுவனத்தில் நுழைந்தனர். சந்தேகத்திற்கிடமான வகையில் அவர்கள் நடந்து கொண்டதையடுத்து, அவர்களிடம் யார் என ஊழியர்கள் விசாரித்தனர்.

அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஊழியர்களை கண்மூடி தனமாக இரும்பு கம்பியால் தாக்கியது. இதில் அவர்கள் நிலை குலைந்தனர். வெளியே சத்தம் கேட்டு விடாத படி அவர்கள் வாயில் பிளாஸ்திரியை போட்டு ஒட்டினர்.

பின்னர் அந்த கும்பல் கொண்டு வந்த வெல்டிங் எந்திரம் மூலம் லாக்கர்களை உடைத்தனர். அதில் இருந்த நகை மற்றும் பணத்தை ஒரு பையில் அள்ளிப் போட்டனர். அதன் பின்னர் 6 பேரும் தப்பி சென்றனர். அவர்கள் அனைவரும் முகத்தை கைக்குட்டையால் மறைத்திருந்தனர். இந்த சம்பவம் சுமார் 10 நிமிடங்களுக்கு நடந்து முடிந்து விட்டது.

அரை மணி நேரம் கழித்து கடன் வாங்குவதற்காக ஒருவர் அங்கு வந்தார். அப்போது அங்கு ஊழியர்கள் கிடந்த நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் கூச்சலிட்டதையடுத்து, சாலையில் சென்றவர்கள் ஓடி வந்தனர். பின்னர் ஊழியர்கள் அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பினர். அவர்கள் கொள்ளையர்கள் தங்களை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதை தெரிவித்தனர்.

ஆட்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் கொள்ளை கும்பல் பட்டப்பகலில் துணிகரமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

இதனால் ஏராளமானோர் திரண்டனர். தகவல் அறிந்ததும் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி அறிவுச் செல்வம், நிலக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. சுருளியாண்டி, வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோஜி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் ஊழியர்களிடம் விசாரணை செய்தனர்.

விசாரணையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.17 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை போனதாக தெரிய வந்தது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர்.

பட்ட பகலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Rs.5 Crore worth jwells, Rs 17 lacs cash robbered at manapuram finance dindukkal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X