வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதம்... பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு... ஜீயர்
வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொள்வது குறித்து பக்தர்களுடன் கலந்து பேசி பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் மீது அவதூறு தெரிவித்ததாக வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொள்வது குறித்து பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். அப்போது ஆண்டாள் குறித்த பெருமைகளை பேசினார். வெளிநாட்டவர் ஆண்டாள் குறித்து எழுதிய கருத்தை மேற்கோள் காட்டினார்.
அது ஆரம்ப காலத்தில் நல்ல நடைமுறையாக இருந்தாலும் பிற்காலத்தில் தவறான அர்த்தம் கொடுத்ததால் அந்த வார்த்தையை பயன்படுத்திய வைரமுத்துவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

கெடு விதித்த ஜீயர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜரும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். வைரமுத்து நேரில் வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்டால் மட்டுமே உண்ணாவிரதம் கைவிடப்படும் என்றார் ஜீயர். எனினும் ஜீயர் வைரமுத்துவுக்கு கெடு விதித்துவிட்டு உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ஜீயர் மன்னிப்பு
இதனிடையே வைரமுத்துவை கண்டித்து ஜீயர் நடத்திய கண்டன கூட்டத்தில் இந்துக்களின் மனம் புண்படும் படி யார் செயல்பட்டாலும் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என்றும் ஜீயர் தெரிவித்திருந்தார். ஜீயரே இப்படி பேசலாமா என கண்டனங்கள் வலுத்தன. இதையடுத்து தான் பேசிய பேச்சுக்கு ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டதாக ஜீயர் தெரிவித்திருந்தார்.

வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை
விதித்த கெடுவுக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்காததால் ஜீயர் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி மீண்டும் பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்தார். ஆனால் வைரமுத்து இன்று வரை மன்னிப்பு கேட்கவில்லை.

முடிவெடுக்கப்படும்
இதுகுறித்து சடகோப ராமானுஜ ஜீயர் கூறுகையில் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் உண்ணாவிரதம் மேற்கொள்வது குறித்து பக்தர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று ஜீயர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications