சகாயம் விசாரணையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துங்கள்: ராமதாஸ் கோரிக்கை
மதுரை: மதுரை பகுதியில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் சகாயம் குழுவின் விசாரணையை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அப்போது அவர் கூறியதாவது:-

வறுமையில் தள்ளிய திராவிடக் கட்சிகள்
இலவசம், சாராயம், சினிமா மோகத்தை 50 ஆண்டுகளாக கடைப்பிடிக்கும் திராவிட கட்சிகளால் மக்கள் வறிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயம் பாதிக்காத தொழில் கொள்கையை பாமக விரைவில் அறிவிக்கும்.
திட்டக் கமிஷன் கருத்து ஏற்புடையதல்ல
விளை நிலங்களை கையகப்படுத்தும் மசோதாவை வாபஸ் பெற்றதாக மத்திய அரசு கூறுகிறது. இதன் முந்தைய சட்டத்தை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என திட்ட கமிஷன் கூறுவது ஏற்புடையதல்ல.
10 மடங்கு நஷ்ட ஈடு தேவை
விளை நிலங்களை கையகப்படுத்தும் போது விவசாயிகளுக்கு பத்து மடங்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய 20 ஆண்டுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். தற்போதைய மின் தேவை நாள் ஒன்றுக்கு ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது.
நிலம் அளித்தவருக்கு வேலை
தொழில் வளர்ச்சிக்காக நிலத்தை கையகப்படுத்தலாம். அவ்வாறு கையகப்படுத்தும் விவசாய நிலத்துக்கு 10 மடங்கு விலை தர வேண்டும். அங்கு அமையும் தொழிற்சாலையில் நிலம் அளித்தவருக்கு வேலை, தொழிற்சாலை இயக்குநர் குழுவில் இடமளிப்பது அவசியம்.
கிரானைட் முறைகேடு
மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள கிரானைட் முறைகேட்டில் நில உச்சவரம்புக்கும் கூடுதலாக நிலம் வாங்கிய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கூடுதல் நிலத்தை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
வெள்ளை அறிக்கை தேவை
தமிழக வளர்ச்சிக்கு 15 லட்சம் கோடி ரூபாயில் 2020 திட்டம் அறிவிக்கப்பட்டு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நில உச்சவரம்பு மீறல்
கிரானைட் சுரண்டலில் நில உச்சவரம்பு மீறப்பட்டுள்ளது. மதுரையைப்போல அனைத்து மாவட்டங்களிலும் கனிமவள முறைகேடு குறித்த விசாரணையை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மூலமாக மேற்கொள்ள வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications