நெருங்கும் கோடை- நல்லி வைத்த மண் ஜாடிகள் விற்பனை ஜோர்
நெல்லை: நெல்லையில் கோடை வெயில் வறுத்தெடுக்க தொடங்கியுள்ள நிலையில் மண் ஜாடிகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை பலமாக பெய்தது. இதுவரை இல்லாத அளவுக்கு தென் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிந்தன.

நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. ஜனவரி, பிப்ரவரியில் பனியின் தாக்கம் முன்பை விட குறைபாகவே இருந்தது. இந்த நிலையில் இப்போதே கோடையை அறிவிக்கும் வகையில் வெயில் வறுத்தெடுக்க தொடங்கியுள்ளது.
இதனால் நாவறட்சியை போக்கும் குளிர்பானங்கள், பழங்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இதே போல் மண் பானைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது. மண் பானையில் வெட்டி வேர் போட்டு குளிர வைத்த தண்ணீரை பருகினால் உடல் சூட்டை தணிக்கும் என்பதால் பலர் மண் பானைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதான சாலையில் உள்ள ஓரு கடையில் நல்லி பொருத்திய மண் ஜாடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை ரூபாய் 250 முதல் ரூபாய் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றையும் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். வெயில் இப்போதே வறுத்தெடுக்க தொடங்கியுள்ள நிலையில் மேலும் இது அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications