அம்மா பார்ப்பதற்குத்தான் சிரித்து பேசுவாங்க! கோபம் வந்துச்சி! பத்திரகாளிதான்.. சங்கமித்ரா கலகல
பென்னாகரம்: எங்கம்மா பார்க்கிறதுக்குத்தான் சிரித்து சிரித்து பேசுவாங்க... கோபம் வந்துச்சு.. பத்ரகாளியாகிடுவாங்க... என சங்கமித்ரா தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார்.
தருமபுரி லோக்சபா தேர்தலில் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். அவருக்காக அவருடைய 3 மகள்கள் சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா ஆகியோர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் 2ஆவது மகளான சங்கமித்ரா தன் கணவர் ஷங்கர் பாலாஜியுடன் அந்த தொகுதியிலேயே தங்கியிருந்து பிரச்சாரம் செய்து வருகிறார். 3ஆவது மகள் சஞ்சுத்ராவும் தொகுதியில் தங்கியிருந்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கல்லூரி தேர்வுக்காக அவர் சென்னை சென்றுவிட்டார்.
வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியின் மகள் வந்திருக்கிறேன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சங்கமித்ரா, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருந்ததாவது: என் அம்மாவை ஜெயிக்க வைத்து டெல்லிக்கு அனுப்பினால், தருமபுரியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தர பாடுபடுவார். இனி தருமபுரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு யாரும் செல்ல தேவையில்லை. மற்ற மாநிலத்தினர் தருமபுரிக்கு வருவார்கள்.
அம்மா பார்ப்பதற்குத்தான் சிரித்து சிரித்து பேசுவார். ஆனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏதாவது அநீதி நடந்தால் பத்திரகாளியாகிடுவாங்க. இதை நாங்கள் நேர்ல பார்த்திருக்கிறோம் என்றார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் கிராமத்திற்கு சென்று பிரச்சாரம் செய்த போது அந்த பகுதி மக்களின் கோரிக்கை பெரிசா ஒன்னும் கிடையாது.
தண்ணீர் வசதி கேட்கிறார்கள். ஒரு சிறுமி நூலகம் கேட்டிருந்தாள், இப்படி சிறிய கோரிக்கைகளை கூட 50 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருந்தது எனக்கு கஷ்டமாக இருந்தது. அம்மாவும் , அப்பாவும் பேசுவது காவிரி உபரி நீர் திட்டம்தான். ஆண்டில் ஒரு முறை காவிரி உபரி நீரை நாம் சேமித்தால் குடிநீர் பிரச்சினை மட்டுமில்லாமல் விவசாய பிரச்சினையும் சேர்ந்து தீரும் அளவுக்கு நமக்கு தண்ணீர் இருக்கிறது. அதுபோல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்!
ஆனால் அதற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வராமல் கடலுக்கு வீணாக அனுப்பி கொண்டிருக்கிறோம். இந்த திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தால், வறட்சி மாவட்டம் என யாரும் சொல்லமாட்டார்கள். நான் அரசியலுக்கு வருவேனா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் என்னிடம் சொல்லிய கோரிக்கைகளை நான் நோட் செய்து என் அம்மாவிடம் கொடுப்பேன். அவர் ஜெயித்தால் இதையெல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைப்பேன். இவ்வாறு சங்கமித்ரா தெரிவித்துள்ளார்.
அது போல் பாப்பாரப்பட்டியை அடுத்த சுரக்காய்பட்டியில் சங்கமித்ரா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது உங்கிட்ட நான் வாக்கு சேகரிக்க வரவில்லை. நீங்கள் எல்லாம் என் சித்தப்பா, பெரியப்பா, மாமா அந்த உரிமையில் உங்களை எல்லாம் பார்க்க வந்தேன்.
நான் வாக்கு சேகரிக்க வந்தேன் என்றால் என்னை திட்டமாட்டீர்கள். பிரதமராக 3ஆவது முறையாக மோடிதான் வருவார். அவர்தான் நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளார். இனி யாரிடமும் தண்ணீர் கொடுங்கள், வேலை கொடுங்கள் என நாம் யார் காலையும் பிடித்துக் கொண்டு தொங்க தேவையில்லை.
தருமபுரியிலிருந்து நம்ம தலைமை டெல்லிக்கு போகுறதால நாம் உரிமையாக கேட்கலாம். நான் உங்களுக்கு எங்கம்மாவை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டேன். இனி நான் எங்கம்மாவை பார்க்க வேண்டும் என்றால் தருமபுரிக்குத்தான் வர வேண்டும். நாங்களும் இங்கு தேர்தல் முடிந்தவுடன் கூட வந்து வந்து செல்வோம். எப்படியாவது சவுமியா அன்புமணியை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications