வைகோவைப் பார்த்து ராஜா அப்படி சொல்லியிருக்கக் கூடாது: சரத்குமார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ‘பாதுகாப்பாக திரும்பிச் செல்ல முடியாது' என்பது வன்முறையைத் தூண்ட கூடிய பேச்சு, வைகோவைப் பார்த்து அவ்வாறுஹெச்.ராஜா கூறியிருக்க கூடாது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அரசை விமர்சனம் செய்து வருவது குறித்து பா.ஜ.க.வை சேர்ந்த ஹெச்.ராஜா தெரிவித்துள்ள கருத்து ஜனநாயகத்திற்கு புறம்பானது.
‘பாதுகாப்பாக திரும்பிச் செல்ல முடியாது' என்பது வன்முறையைத் தூண்ட கூடிய பேச்சு, வருந்தத்தக்க பேச்சு. பொது வாழ்வில் எவரும் இதுபோன்று பேசக்கூடாது. அது தவறானது என்பதுதான் எங்கள் கருத்து என்று சரத்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications