இந்திக்கு மட்டும் சமூக வலைத்தளங்களில் முன்னுரிமை- மத்திய அரசின் உத்தரவுக்கு சரத்குமார் கண்டனம்
சென்னை: இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக மற்ற மொழி பேசும் மக்களும் வாழும் நாட்டில் இந்தி மொழிக்கு மட்டும் அதிக முன்னுரிமை தருவது ஏன் என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவருமான ஆர்.சரத்குமார்.
மத்தியில் புதிய ஆட்சி அமைந்ததையடுத்து அனைத்து அமைச்சகங்களிலும் இந்தியின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. சில அரசு உத்தரவுகள் கூட இந்தியிலேயே வழங்கப் பட்டது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை தரவேண்டும் என சமீபத்தில் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முற்படுவதாகவும், இந்தி பேசாதவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசு இந்திக்கு மட்டும் அதிக முன்னுரிமை தருவது ஏன் என அவர் கேட்டுள்ளார்.
மேலும், அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிர்ச்சி...
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தலங்களை பயன்படுத்தும் போது மத்திய அரசின் அதிகாரிகள், அலுவலர்கள், வங்கிகள், வங்கி அதிகாரிகள் இந்தி மொழிக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இந்திக்கு இணையான மொழிகள்...
இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக மற்ற மொழி பேசும் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். அவரவர்கள் தேவைக்கு, தொழில் ரீதியாக, கல்வி ரீதியாக எந்த ஒரு மொழியையும் தேர்ந்தெடுத்து படிப்பதை, அறிந்து கொள்வதை எவரும் தடுக்கமுடியாது.

தவறான உத்தரவு...
அவ்வாறு இருக்கையில் புதிய மத்திய அரசு ‘‘இந்திக்கு சமூக வலைத்தளங்களில் முன்னுரிமை'' அளிக்க வேண்டும் என்று உத்தரவிடுவது மாபெரும் தவறு.

வேண்டுகோள்...
பிரதமர் சொன்னது போல நாம் ஒன்றாகச் செயல்பட்டால் தான் நம் திட்டங்கள் வெற்றிபெறும் என்பது நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் இதுபோன்ற ஒரு மொழிக்கு, ஒரு இனத்திற்கு முன்னுரிமை என்ற திட்டங்களை மத்திய அரசு முழுமையாக விட்டொழிக்கவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications