ச.ம.க தொண்டர்கள் மது, சிகரெட் குடிக்க கூடாது... சரத்குமார் அன்புக்கட்டளை
திருப்பூர்: சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் புகைப்பிடிக்கவோ, மதுகுடிக்கவோ கூடாது. இளைஞர்களுக்கு நாம் முன் உதாரணமாக இருக்க வேண்டும். டாஸ்மாக் கடையை பூட்டுவதற்கு போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, டாஸ்மாக் கடையில் மதுவை வாங்காமல் புறக்கணித்தால் அந்த கடை தானாக மூடப்படும். என்று நடிகரும் அக்கட்சியின் தலைவருமான சரத்குமார் அறிவுரை வழங்கி உள்ளார்.
திருப்பூர் தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உடுமலையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர், சமத்துவ மக்கள் கட்சியின் 9 ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைத்து பொதுக் கூட்டங்களிலும் நான் கலந்து கொள்கிறேன் என்றார்.

மதுவிலக்கு
தமிழகத்தில் உடனே மதுவிலக்கை அமல்படுத்துவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அதற்காக நானோ, முதல்வரோ ஜெயலலிதாவோ மதுவுக்கு ஆதரவானவர்கள் என்று அர்த்தமில்லை. மதுவிலக்கை படிப்படியாகத்தான் அமல்படுத்த முடியும்.

குடிக்காதீர்கள்
சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் புகைப்பிடிக்கவோ, மதுகுடிக்கவோ கூடாது. இளைஞர்களுக்கு நாம் முன் உதாரணமாக இருக்க வேண்டும். டாஸ்மாக் கடையை பூட்டுவதற்கு போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, டாஸ்மாக் கடையில் மதுவை வாங்காமல் புறக்கணித்தால் அந்த கடை தானாக மூடப்படும். எனவே உங்கள் கிராமத்தில் இதற்கு ஊர்க்கட்டுப்பாடு விதிக்க ஏற்பாடு செய்யுங்கள்.

கருத்துக்கணிப்பு பொய்
தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு தவறான ஒரு கருத்துக்கணிப்பாகும். மக்கள் மனதில் தவறான தகவலை திணிப்பதற்காக தி.மு.க. இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. கருத்துக்கணிப்பு என்றால் 234 தொகுதிகளில் எடுக்க வேண்டும். ஆனால் 80 தொகுதிகளில் 3 ஆயிரம் பேரிடம் மட்டும் கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளனர்.

யார் முதல்வர்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு உள்ள ஆதரவு சதவீதத்தைவிட மற்றவர்களின் கூட்டு சதவீதம் அதிகமாக வருவது போல் தெரிவித்துள்ளனர். அந்த கூட்டணியில் 9 பேர், தானே அடுத்த முதல்வர் என்று கூறி வருகிறார்கள்.

6 வது முறை முதல்வர்
எதிர்கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து யார் முதல்வர் என்று முடிவு செய்து கூட்டணி அமைப்பதற்குள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வராகிவிடுவார் என்று கூறி கூட்டத்தை முடித்தார் சரத்குமார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications