பிரதமர் மோடியின் அருமை டிரம்புக்கு தெரிது! ஆனால் இங்குள்ள மக்களுக்கு!சரத்குமார் கேள்வி
தென்காசி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அருமை தெரிகிறது. ஆனால் இங்குள்ள கடைகோடி மக்களுக்கு தெரியவில்லை என பாஜகவை சேர்ந்த சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தென்காசியில் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அருமை தெரிகிறது. ஆனால் இங்குள்ள கடைகோடி மக்களுக்கு தெரியவில்லை.

பலர் இப்போது புதிதாக பேசி அரசியலுக்கு வருகிறார்கள். என்னைவிட அதிகம் அரசியல் தெரிந்தவர்கள் சினிமாவில் இல்லை என தெரிவித்துள்ளது. அவர் மேலும் கூறுகையில் மத்திய பட்ஜெட்டில் தமிழகம், ஆந்திரா என தனித்தனியாக சொல்லவில்லை, ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்காகத்தான் செலவு செய்யப்படவுள்ளது. இந்தியாவின் பெருமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய், திமுகவை எதிர்ப்பை தனது கொள்கை என கூறியுள்ளார். அதை ஏற்க முடியாது. இதற்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு இதை செய்யவில்லை, அதை செய்யவில்லை. ஆனால் நான் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வேன் என கூறுவதுதான் ஒரு கட்சியின் கொள்கையாக இருக்க முடியும். அந்த வகையில் மக்களுக்கு விஜய் என்ன செய்ய போகிறார் என்பதை அவர் சொல்ல வேண்டும். இவ்வாறு சரத்குமார் விமர்சித்துள்ளார்.
சரத்குமார் அகில இந்திய சமத்துவ கட்சி என்ற ஒரு அரசியல் அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார். இந்த கட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து தோல்வியை சந்தித்தது.
இதைத் தொடர்ந்து தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். நள்ளிரவு 2 மணிக்கு தனக்கு அந்த யோசனை வந்ததாகவும் அதை ராதிகாவை எழுப்பி சொன்னதாகவும் அதற்கு அவர் "நீங்கள் எதை செய்தாலும் சரியாக இருக்கும் என நம்புகிறேன்" என தெரிவித்தாராம்.
இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்த சரத்குமார், தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ராதிகா போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியை ராதிகாவும் சரத்குமாரும் சந்தித்து பேசினர். மேலும் அவ்வப்போது பாஜக சார்பில் நடைபெறும் நிகழ்வுகளில் இருவரும் கலந்து கொள்கிறார்கள். அண்மையில் கூட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பாஜக மகளிரணியினர் மனு கொடுத்த போது ராதிகாவும் உடனிருந்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications