சோலார் பேனல் மோசடி- திமுகவின் பழனிமாணிக்கத்தின் தொடர்புக்கான ஆதாரம் தாக்கல்- சரிதா நாயர்
சோலார் பேனல் மோசடி வழக்கில் திமுகவின் பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு உள்ளது என்பதற்காக ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளதாக சரிதா நாயர் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சோலார் பேனல் மோசடி வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை இது தொடர்பாக விசாரிக்கும் ஆணையத்திடம் ஒப்படைத்துவிட்டதாக தொழிலதிபர் சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
கேரளாவை உலுக்கி வருகிறது சோலார் பேனல் மோசடி வழக்கு. இதில் ஒரு வழக்கில் தொழிலதிபர் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் சரிதா நாயருக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.

கோவையிலும் சரிதா நாயர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஆஜராக சரிதா நாயர் இன்று கோவை வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சரிதா நாயர், என் மீது எந்த தவறும் இல்லை. இந்த மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு உள்ளது. இதற்கான ஆதாரங்களை சோலார் பேனல் கமிஷனிடம் கொடுத்திருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications