அய்யோ....எங்களுக்காக அழுது புரள 'அந்த இருவர்' மட்டும்தானா... விரக்தியில் சசிகலா
அதிமுகவில் தங்களை ஒதுக்கி வைக்கும் முடிவுக்கு எதிராக ஒருவர் கூட கூப்பாடு போடவில்லை என்பதில் சசிகலா ரொம்பவே விரக்தியில் இருக்கிறாராம்.
சென்னை: அதிமுகவில் இருந்து தங்களை ஒதுக்குவதாக அறிவித்தபோது இருவர் மட்டும்தான் ஆதரவு குரல் எழுப்பியிருப்பது பெங்களூரு சிறைவாசி சசிகலாவை கொந்தளிக்க வைத்துள்ளதாம்.
சசிகலா சிறைக்கு போனதுதான் தாமதம்.. அதுவரை சின்னம்மா என கூவியவர்கள் எல்லாம் அவரைப் பற்றி எதுவுமே கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதா சிறைக்குப் போனபோது கூப்பாடு போட்ட கூத்துகள் அரங்கேறும் என எதிர்பார்த்திருக்கிறார் சசிகலா.

சசி பெயர் இருட்டடிப்பு
ஆனால் சொந்த அக்கா மகன் தினகரன் கூட ஆர்கே நகர் தேர்தலில் சசிகலா பெயரை உச்சரிக்காமல், அவரது படத்தை பயன்படுத்தாமல் பிரசாரம் செய்த போது விரக்தியின் உச்சத்துக்கு போனார் சசிகலா. அதற்கு பிறகு தினகரனை அதிமுகவை விட்டு ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி கோஷ்டி அறிவித்தது சசிகலா எதிர்பார்க்காத ஒன்று.

அந்த இருவர்...
அப்போதும் கூட தங்கள் குடும்பத்துக்காக ஒருவர் கூட குரல் எழுப்பாமல் அமைதி காத்தது சசிகலாவால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தபோதும் நாஞ்சில் சம்பத்தும் கர்நாடகா புகழேந்தியும் மட்டுமே தொடர்ந்து சசிகலா, தினகரனுக்காக குய்யோ முறையோ என குமுறி குமுறி பேசி வருகின்றனர்.

விரக்தியில் சசிகலா
தங்களால் பதவி பெற்றவர்கள் எல்லாம் தப்பி ஓடிவிட இந்த இருவர் மட்டுமே கதறி அழுகிறார்கள் என்ற தகவல் சசிகலாவை ஒருபுறம் நெகிழ வைத்ததாம். அதேநேரத்தில் இவ்வளவு செய்தும் அந்த இருவரைத் தவிர ஒருவர் கூட நமக்காக பேசவில்லையே... என்கிற விரக்தியும் சசிகலாவிடம் இருக்கிறதாம்.

தனிக்கட்சிக்கு ஓகே
இதை தம்மை சந்தித்த வழக்கறிஞரிடம் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார் சசிகலா. இதனால்தான் இந்த அதிமுகவே வேண்டாம்; தனிக்கட்சியே தொடங்கலாம் என்ற கணவர் நடராசன் முடிவுக்கு சசிகலாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications