மீண்டும் அக்கப்போர்.. பணிப் பெண்ணை மர்ம நபர்கள் மிரட்டுவதாக போலீசில் சசிகலா புஷ்பா புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டிடிவி எப்படி சசிகலா புஷ்பாவை சந்திக்கலாம்?- வீடியோ

  சென்னை: தமது வீட்டு பணிப் பெண்ணை மர்ம நபர்கள் போனில் மிரட்டுவதாக போலீசில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா திடீரென புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சசிகலா புஷ்பாவின் வீட்டில் பணிபுரிந்த 2 பெண்கள் அவரது குடும்பத்தினர் மீது ஏடாகூட புகார்களை கூறியதாக கடந்த ஆண்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அரசியல்வாதிகள் நெருக்கடியால் தாங்கள் அப்படி கூறியதாக அந்த பெண்கள் பல்டி அடித்தனர்.

  அமைதியான சசிகலா புஷ்பா

  அமைதியான சசிகலா புஷ்பா

  இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. அதன்பின்னர் ஊடகங்களில் சசிகலா புஷ்பாவின் பெயர் அடிபடாமல் இருந்தது.

  பரபரப்பான சந்திப்பு

  பரபரப்பான சந்திப்பு

  இந்நிலையில் திங்கள்கிழமையன்று திடீரென்று தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சசிகலா புஷ்பா. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  ஆச்சரிய அதிமுக

  ஆச்சரிய அதிமுக

  கடந்த 2 ஆண்டுகாலமாக சசிகலா குடும்பத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர் சசிகலா புஷ்பா. ஆனால் இந்த கடும் எதிர்ப்பைக் கைவிட்டு தினகரனின் தலைமையை சசிகலா புஷ்பா ஏற்றது அதிமுகவினரை ஆச்சரியப்பட வைத்தது.

  போலீஸ் விசாரணை

  போலீஸ் விசாரணை

  இதனிடையே சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் சசிகலா புஷ்பா ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தமது வீட்டு பணிப் பெண்ணை மர்ம நபர்கள் தொலைபேசியில் மிரட்டுவதாக கூறியுள்ளார். ஆனால் இந்த பணிப் பெண் யார்? எதற்காக அவர் மிரட்டப்படுகிறார்கள்? என்கிற விவரம் எதுவும் வெளியாகவில்லை. இந்த புகாரை தற்போது தண்டையார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  AIADMK RajyaSabha MP Sasikala Pushpa lodged a complaint at Chennai police alleging that her housemaid was being threatened.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற