உரிய விதிப்படியே பொதுச்செயலராக தேர்வு- தேர்தல் ஆணையத்தில் சசி வக்கீல் பதில்!
அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் இன்று பதிலளித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் பதவி தொடர்பான நோட்டீஸுக்கு சசிகலா தரப்பில் இன்று தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில் உரிய விதிகளின்படியே தாம் பொதுச்செயலராகி இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா முதலில் புகார் தெரிவித்தார்.

அதிமுக சட்டவிதி
அதிமுகவின் சட்டவிதிகளின் படி 5 ஆண்டுகாலம் ஒருவர் உறுப்பினராக இருந்தால்தான் கட்சிப் பதவிகளில் உட்கார முடியும் என்பது சசிகலா புஷ்பா தரப்பின் வாதம். இதனிடையே முதல்வர் பதவியையும் சசிகலா கைப்பற்ற முயற்சித்ததால் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது.

ஓபிஎஸ் அணி புகார்
ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர், கட்சி விதிப்படி இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்கவே முடியாது; பொதுச்செயலர் என்பவர் பொதுக்குழு மற்றும் அதிமுக தொண்டர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே கட்சி விதி என தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தனர். இந்த புகார் மனுவின் அடிப்படையில் சசிகலா விளக்கம் தர கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

பெங்களூரு சிறைக்கு நோட்டீஸ்
இந்த நோட்டீஸ் பெங்களூரு சிறைக்கே அனுப்பி வைக்கப்பட்டது. சசிகலா பதிலளிப்பதற்கு இன்றுதான் கடைசி நாள்.

எல்லாம் விதிப்படிதான்
இந்த நிலையில் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் இன்று சசிகலாவின் பதிலை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார். அதில், உரிய விதிகளின்படிதான் தாம் பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டதாக சசிகலா விளக்கம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications