அண்ணா நினைவு நாள்.. மெரினாவில் இன்று 144 தடை உத்தரவை மீறுகிறார்கள் சசிகலா, ஸ்டாலின்?
அண்ணா நினைவு நாளை அதிமுக, திமுக இன்று கடைபிடிக்கிறது. மெரினாவில் 144 தடை உத்தரவை மீறி சசிகலா, ஸ்டாலின் ஆகியோர் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
சென்னை: பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலர் சசிகலா, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கட்சியினருடன் இணைந்து அஞ்சலி செலுத்த உள்ளனர். சென்னை மெரினாவில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தடையை மீறி நினைவஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தி மாபெரும் புரட்சியால் சென்னை மெரினா கடற்கரையில் பிப்ரவரி 12-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி போன்றவை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கட்சியினருடன் சசிகலா மற்றும் ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். மெரினாவில் 4 பேர் ஒன்று கூடுவதற்கே தடைவிதிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தடையை மீறி இன்று சசிகலா, ஸ்டாலின் ஆகியோர் அண்ணா நினைவுநாள் அமைதிப் பேரணியை நடத்த உள்ளனர். அப்போது போலீசார் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications