என்னதான் நடக்குது சசிகலா கோஷ்டியில்... மாறி மாறி பிதற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா கோஷ்டி அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் மாறி மாறி பேசிவருவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்களும், எம்எல்ஏக்களும மாறி மாறி பிதற்றுவது சசிகலா அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமகா கட்சி இரண்டாக உடைந்தது. இதில் ஒரு தரப்பினர் ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் சசிகலா கோஷ்டிக்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றனர்.சசிகலாவின் அதிகார ஆசையால் ஏற்பட்ட மோதலால் அக்கட்சியின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. அதிமுக என்ற பெயரையும் கொடியையும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தற்கான ஆவணங்கள் சிக்கியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் தேர்தல் ஆணையம் டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்தார் டிடிவி தினகரன்.

திரும்பும் திசையெங்கும் அடி

திரும்பும் திசையெங்கும் அடி

இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்களும் வருமான வரித்ததுரை வளையத்துக்குள் சிக்கியுள்ளனர்.திரும்பும் திசையெங்கும் தினகரன் தரப்புக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. இந்நிலையில்தான் இரு அணிகளும் இணைய எந்த நிபந்தனையும் இல்லை என்றார் ஓபிஎஸ்.

பேச்சுவார்த்தைரக்கு குழு அமைக்கவில்லை

பேச்சுவார்த்தைரக்கு குழு அமைக்கவில்லை

இதனால் உற்சாகமான சசிகலா கோஷ்டி அவசர அவசரமாக அமைச்சர்கள் ஆலோசனை, பேச்சுவார்த்தை நடத்தத குழு அமைப்பு என வேகமாக வேலைகளில் இறங்கியது. இந்நிலையில் சசிகலா குடும்பம் கட்சியில் இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என திட்டவட்டமாக அறிவித்தார் ஓபிஎஸ்.
இந்நிலையில் தினகரனை சந்தித்துவிட்டு வெளியே வந்த வெற்றிவேல் எம்எல்ஏ, அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேச குழு ஏதும் அமைக்கவில்லை என்று அமைச்சர் வெற்றிவேல தெரிவித்தார். தினகரனுக்கு தெரியாமல் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

பேச்சுவார்த்தை குழுவுடன் பேச வேண்டும்

பேச்சுவார்த்தை குழுவுடன் பேச வேண்டும்

இந்நிலையில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவுடன் ஓபிஎஸ் பேசினால் தான் மற்ற முடிவு எடுக்க முடியும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். பிரிந்துள்ள அணிகள் மீண்டும் இணைய வேண்டும் எனவும் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இரட்டை இலை மீட்பு, கட்சியின் நலனுக்காக இரு அணிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

பிதற்றும் சசிகலா கோஷ்டி

பிதற்றும் சசிகலா கோஷ்டி

ஒருபுறம் சசிகலா கோஷ்டி எம்எல்ஏ பேச்சுவார்த்தைக்கு குழு ஏதும் அமைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மற்றொருபுறம் அமைச்சர் சிவி.சண்முகம் பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் ஓபிஎஸ் பேச வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியல் நெருக்கடியே காரணம்

அரசியல் நெருக்கடியே காரணம்

அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் மாறி மாறி பேசுவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா கோஷ்டியின் இந்த அவசர நிலை மற்றும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாறி பிதற்றுவது அந்த அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala group MLa and ministers are in confusion. Thats why they are talking alternatively they are in crisis says political commemtators .
Please Wait while comments are loading...