ஆடி வெள்ளிக் கிழமையன்று... மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த சசிகலா!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு செய்தார். கோயிலுக்கு வந்த அவரை கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் வரவேற்றார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றார். தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட சசிகலா இப்போது தேர்தல் வெற்றிக்கு நன்றி கூற ஒவ்வொரு கோவிலாக சென்று வருகிறார்.
இன்று ஆடிப்பூரம், ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சசிகலா வரும் தகவல் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
கோவில் தக்கார் தொழிலதிபர் கருமுத்து.கண்ணன், பூஜைக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கோவிலுக்கு வந்த சுவடே தெரியாமல் பூஜையை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார் சசிகலா.
பருவநிலை மாற்றத்தை உண்டாக்கக் கூடிய மாதம் என்றவகையில் ஆடிக்கு சிறப்பு உண்டு. இந்த மாதத்தில் முளைக் கொட்டு நிகழ்ச்சிகள் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகின்றன. அதிலும், ஆடி வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு பூஜை செய்யும்போது, ஏராளமான நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகமாக இருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேஸ்வரர். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது.
அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆடி வெள்ளியில் அம்மன் வணங்கும்போது, எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் அரசாட்சி தொடரும் என்ற நம்பிக்கை வலம் வருகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலை மீனாட்சி அம்மன் சந்நிதியில் வைத்து வழிபட்டார் சசிகலா. தேர்தலுக்குப் பிறகு அம்மனுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார் என்று ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications