மஞ்சள், பிங்க் நிற துண்டுசீட்டில் ரகசிய குறியீடுகளை எழுதி லஞ்சம் கொடுத்த சசிகலா.. திடுக் தகவல்கள்!
அதிகாரிகளுக்கு எப்படி பணம் கொடுக்க வேண்டும் என மஞ்சள் மற்றும் பிங்க் நிற துண்டுச்சீட்டுகளில் சசிகலா ரகசிய குறியீடுகளை எழுதி கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
சென்னை: அதிகாரிகளுக்கு எப்படி பணம் கொடுக்க வேண்டும் என மஞ்சள் மற்றும் பிங்க் நிற துண்டுச்சீட்டுகளில் சசிகலா ரகசிய குறியீடுகளை எழுதி கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளி சசிகலாவுக்கு படுக்கையறை, சமையலறை, பார்வையாளர் அறை, யோகா அறை, டிவி பார்ப்பதற்கான அறை என மொத்தம் 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பார்வையாளர்களை சந்திக்க ரோலிங் சேர், சமைத்து சாப்பிட குக்கர் என சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாக டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் சசிகலா சிறையில் இருந்து வெளியே ஷாப்பிங் சென்ற வீடியோவும் வெளியானது. இதனால் சசிகல தரப்பு மீதானர் விசாரணை தீவிரப்பபடுத்தப்பட்டது.

துண்டுச்சீட்டில் ரகசிய குறியீடு
இதில் சிறையில் பல்வேறு வசதிகளை பெற மஞ்சள், மற்றும் பிங்க் நிற துண்டுச்சீட்டுகளில் சசிகலா ரகசிய குறியீடுகளை குறித்து கொடுத்ததும் அதன்மூலம் பணம் கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. ஒரு மாதம் வரை சசிகலா இந்த முறையைதான் பின்பற்றி வந்துள்ளார்.

துண்டுச்சீட்டை நம்பிய சசிகலா
ஆரம்பத்தில் சிறையில் யாரையும் நம்பாமல் துண்டுச்சீட்டுகளை பயன்படுத்தி பணம் பரிமாற்றம் செய்துள்ளார் சசிகலா. இதையடுத்து வழக்கமாக லஞ்சம் வாங்கிய அதிகாரிகளே சசிகலா மற்றும் இளவரசிக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து வந்துள்ளனர்.

யார்யாருக்கு எவ்வளவு?
மேலும் புதிய நபர் எவராவது இவர்களுக்கு உதவ முன் வந்தால் அவர்களைப் பற்றியமுழு விபரங்களையும் சிறை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்டே பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எங்கு வைத்து பணம் கொடுக்கப்பட்டது,யார் மூலம் பணம் கொடுக்கப்பட்டது. எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது, ஆகிய விபரங்களையும் திரட்டி வருகின்றனர்.

செல்போனில் பேசிய லிஸ்ட் ரெடி
மேலும் சிறைக்குள் இருந்த சசிகலா செல்போனில் யார் யாரிடம் பேசினார் என்கிற முழு விபரத்தையும் ஆதாரங்களுடன் எடுத்து வைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் அதிகம் பேசிய பல்வேறு முக்கியமான நபர்களிடம் விசாரணை செய்ய வினய் குமார் திட்டமிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications