மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவாடுகளை சாலையில் வீசி எறிந்த சாயல்குடி அதிகாரிக்கு மறக்க முடியாத பரிசு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சந்தையில் ஆய்வு செய்ய வந்த சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர்.. மாற்றுத் திறனாளி பெண் விற்க வைத்திருந்த கருவாடுகளை வீசிஎறிந்து கன்னியக்குறைவாக நடந்து கொண்ட புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுவாக தமிழகத்தில் உள்ள சந்தைகளுக்கு வெளியே இல்லாதவர்கள், முடியாதவர்கள், சாலையோரங்களில் சிறியதாக தக்காளி, வெங்காயம், கருவாடு, முட்டை, என காய்கறிகள் அல்லது பழங்கள் என கிடைத்ததை கூறுபோட்டு விற்பனை செய்து கொண்டிருப்பார்கள்.

Sayalkudi municipal executive officer suspended for chasing away disabled woman selling karuvad

சந்தைக்குள் வாங்க செல்லும் மக்கள், சந்தைக்கு வெளியில் விற்பர்களிடம் பொருட்கள் நன்றாக இருந்தால், விலைகுறைவாக இருந்தால் வாங்குவார்கள். இது எல்லா சந்தைகளிலும் இருக்கிறது. அதேநேரம் சந்தைக்கு வெளியே சாலையோரங்களில் விற்பனை செய்வோருக்கு எதிராக அடிக்கடி அதிகாரிகள் நடவடிக்கையும் எடுப்பது உண்டு. சில நேரங்களில் அப்படி நடவடிக்கை எடுக்கும் போது அதிகாரிகள் எல்லை மீறி நடந்து கொள்வதும் உண்டு.

இந்நிலையில் அப்படியான சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்துள்ளது. மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் சந்தைக்கு வெளியே கருவாடுகளை வைத்து விற்றுக்கொண்டிருந்த நிலையில், அதனை சாலையில் வீசி, கன்னியக்குறைவாக நடந்து கொண்டுள்ளார் சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் . இதற்கு மாற்றுத்திறனாளிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

என்ன நடந்தது? ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சனிக்கிழமை அன்று வாரச் சந்தை நடைபெற்றது. சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் மற்றும் அதிகாரிகள் சந்தையை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது, சந்தை நுழைவாயில் அருகே மாரியம்மாள் (50) என்ற மாற்றுத் திறனாளி வைத்திருந்த கருவாட்டுக் கடையை உடனடியாக அகற்றுமாறு, சாயல்குடி செயல் அலுவலர் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கு மாற்றுத்திறனாளியான மாரியம்மாள் மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து, மாரியம்மாள் வைத்திருந்த கருவாடுகளை சேகர் தூக்கி எறிந்ததுடன் அங்கிருந்து போகுமாறு எச்சரித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த பலரும் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்கள்.

Sayalkudi municipal executive officer suspended for chasing away disabled woman selling karuvad

இதையடுத்து மாற்றுத் திறனாளி பெண்ணிடம் செயல் அலுவலர் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக மாற்றுத் திறனாளி சங்கத்தினர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து சர்ச்சை காரணமாக சாயல்குடி செயல் அலுவலர் சேகரை தற்காலிகப் பணி நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+