For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட செயல் அதிகாரி நியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோ‌யிலை பொது தீட்சிதர்கள் நிர்வகித்து வந்தார்கள். பல புகார்கள் வந்ததை தொடர்ந்து இக்கோ‌யிலை நிர்வகிக்க, செயல் அதிகாரியை நியமிக்க தமிழக அரசு 1987இல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பொது தீட்சிதர்கள் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்றனர்.

Chidambaram Natarjar temple

இதன்பிறகு இந்த வழக்கை நீதிபதி ஆர்.பானுமதி விசாரித்தார். செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு உரிமை உண்டு என்று கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து அன்றையதினம் இரவே நடராஜர் கோ‌யிலை நிர்வகிக்க செயல் அதிகாரி நியமிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நடராஜர் கோயிலை நிர்வகிக்க தமிழக அரசு நியமித்த அதிகாரி நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தீட்சிதர்கள் தரப்பில் பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சாமி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக அரசின் நிர்வாக அதிகாரி நிரந்தரமாக செயல்பட முடியாது என்றும், நிர்வாகத்தில் முறைகேடு இருந்தால் சிறிது காலம் மட்டுமே நிர்வாக அதிகாரியாக செயல்படலாம் என்றும் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து மீண்டும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் சிதம்பரம் நடராஜர் கோயில் வருகிறது.

English summary
SC has quashed the TN govt order against Chidambaram Natarjar temple Dikshidars in a verdict on the appeal of the temple priests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X