பள்ளிப் பேருந்தில் திடீர் தீ... குழந்தைகள் தப்பினர்.. கரூரில் பதட்டம்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் தனியார் பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஒட்டுநர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த குழந்தைகளைக் காப்பாற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் தனியார் பள்ளி வாகனம் வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி விட்டதுடன் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வீரராக்கியம் பகுதிக்கு செல்வதற்காக கரூர் பேருந்து நிலையம் அருகே வந்த போது திடீரென பேருந்தின் இன்ஜின் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

School children escape unhurt in fire accident

இதைப் பார்த்து பேருந்தில் இருந்த குழந்தைகளின் அலறிதுடித்தனர். இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஒட்டுநர்கள் குழந்தைகளை மீட்பதற்காக போராடினர். அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் எவ்வித உயிர் சேதமின்றி காப்பாற்றப்பட்டனர்.

School children escape unhurt in fire accident

இதுகுறித்து சம்பவத்தை கண்ட பாலு கூறும்போது அதிகப்படியான குழந்தைகளை ஏற்றி வந்த வாகனம் முறையான பராமரிப்பு இல்லாததால் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பேருந்தில் உள்ள அவசர வழி கதவுகள் திறக்க முடியாமல் போனதால் பேருந்தின் பின்பக்க கண்ணாடிகளை உடைத்து குழந்தைகளை காப்பாற்றினர்.

School children escape unhurt in fire accident

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் காப்பாற்றியதன் விளைவாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்றார்,.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+