திண்டிவனம் மாணவி கொலையில் திடீர் திருப்பம்... நகைக்காக சகமாணவியே கொன்றது அம்பலம்!
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவி கொலை வழக்கில், சகமாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், அம்மாணவி நகைக்காக தோழியைக் கொன்றதாக தெரிய வந்துள்ளது.
திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரவி. இவரது மகள் சசிரேகா (14), ஓமந்தூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 31-ந் தேதி காலையில் வழக்கம் போல் பள்ளி சென்ற சசிரேகா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சசிரேகாவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் தோழியின் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் சசிரேகாவை காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், மொளசூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சசிரேகா பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஆடைகள் கலைந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த சசிரேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சசிரேகாவின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். கொலையாளியை கண்டறிந்து கைது செய்ய கோரி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், உரிய விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அளித்த வாக்குறுதியின் பேரில் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து சசிரேகாவின் மரணம் தொடர்பாக கிளியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மாயமான போது மாணவி அணிந்திருந்த நகைகள், அவர் சடலமாக மீட்கப்பட்டபோது இல்லாததைக் கண்டுபிடித்தனர்.
எனவே, திருட்டு காரணமாக நடத்தப்பட்ட கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சக மாணவி ஒருவரே சசிரேகாவைக் கொலைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவியைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications