பள்ளி மாணவியை மிரட்டி 4 வருடங்கள் பலாத்காரம் செய்த நண்பர்கள்.. 3 முறை கருக்கலைப்பு.. சென்னையில் ஷாக்
Recommended Video

சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் மற்றுமொரு பலாத்கார சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில்தான் சுமார் 50 பெண்களை பலாத்காரம் செய்ததாக வேளச்சேரி அருகே அறிவழகன் என்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, காமுகன் கைது செய்யப்பட்டான். https://tamil.oneindia.com/news/tamilnadu/man-raped-over-50-women-chennai-say-cops-302074.html
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பலாத்கார சம்பவம் நகரை உலுக்கியுள்ளது

போலீசில் புகார்
சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர், தனது 17 வயது மகளை, சவுகார்பேட்டை கிருஷ்ணமுதலி தெருவை சேர்ந்த மோனி மற்றும் வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ரவீந்திரன் ஷர்மா ஆகிய இரண்டு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்தார்.

குற்றவாளி கைது
இதையடுத்து, இருவர் மீதும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ரவீந்தர் சர்மாவை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மோனி தலைமறைவாகிவிட்டார்.

பேஸ்புக் பழக்கம்
கடந்த 2013ம் ஆண்டு, செல்போன் கடையில் வேலை பார்த்த மோனிக்கு பேஸ்புக் 9ம் வகுப்பு மாணவி பழக்கம் கிடைத்துள்ளது. பிறகு இது காதலாகியுள்ளது. இதையடுத்து லாட்ஜூக்கு அழைத்து சென்று மோனி அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதை வீடியோ எடுத்து அதை ரவீந்தரிடம் காட்டி மகிழ்ந்துள்ளார். இதை பார்த்த ரவீந்தரும் ஆசைப்பட்டு அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருக்க கேட்டுள்ளார்.

வீடியோ எடுத்து மிரட்டல்
அதேபோல ஒரு நாள் லாட்ஜிக்கு காதலியை அழைத்து வந்து, ரவீந்தருடன் உல்லாசமாக இருக்க மோனி கூறியுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தபோது பேஸ்புக்கில் உல்லாச வீடியோவை போட்டுவிடுவேன் என மோனி மிரட்டியுள்ளார். இதையடுத்து ரவீந்தருடனும் அந்த மாணவி உல்லாசமாக இருந்துள்ளார். பிறகு மாணவியை ரவீந்தர் காதலிப்பதாக கூறியுள்ளார். இதையும் ஏற்றுக்கொண்ட மாணவி, மோனியுடனும், ரவீந்தருடனும் மாறி, மாறி ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் லாட்ஜில் உல்லாசமாக இருந்துள்ளார்.

வேறு பெண்ணுடன் திருமணம்
இப்படி இருவருடனும் உல்லாசமாக இருந்ததால் மாணவி கர்ப்பமானார். அதை மாத்திரைகளை வாங்கி கொடுத்து கலைத்துள்ளனர். மாணவியிடம் இருவரும் அடிக்கடி பணம் வாங்கி செலவிட்டு வந்துள்ளனர். பணம் தராவிட்டால் வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதற்கிடையே கடந்த 10ம் தேதி ரவீந்தருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இதனால், மாணவி சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்தே புகார் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications