மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - "போஸ்கோ" சட்டத்தின் கீழ் தலைமையாசிரியர் கைது
தர்மபுரி : பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தலைமை ஆசிரியரை, போலீசார், 'போஸ்கோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தர்மபுரியை அடுத்த, மாட்டியாம்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னமாது என்பவர், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, தனியார் தொண்டு நிறுவன அமைப்பினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த தொண்டு நிறுவனம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், மாட்டியாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தலைமை ஆசிரியர் சின்னமாது, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியின் பரிந்துரையின்படி, சின்னமாதுவை, 'சஸ்பெண்ட்' செய்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, போலீசார், சின்னமாதுவை தேடி வந்த நிலையில், தர்மபுரி காவல் நிலையத்தில், நேற்று சரண் அடைந்தார்.
சின்னமாதுவை, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தொடர்பான, 'போஸ்கோ' சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications