பள்ளிக் கட்டணம் செலுத்த வழியில்லை... கிரண்பேடியின் காலில் விழுந்து அழுத மாணவர்
புதுச்சேரி: தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் காலில் விழுந்து தனியார் பள்ளி மாணவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று முதலியார்பேட்டை துலுக்காணத்தம்மன் நகரில் நேற்று துப்புரவு பணிகளை மேற்கொண்டார். அப்போது அங்குவந்த மாணவர் ஒருவர் கிரண் பேடியின் காலை பிடித்துக் கொண்டு அழுதார். அந்த மாணவர் பெயர் தட்சிணாமூர்த்தி புதுவை தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அப்போது அந்த மாணவர், தான் படிக்கும் பள்ளியில் கல்விக்கட்டணம் அதிகமாக இருக்கிறது. நான் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், எனது குடும்பத்தால் அந்த பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என கூறினார். எனவே பள்ளி கட்டணத்தை குறைக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த அந்த மாணவர், அது குறித்து கோரிக்கை மனு ஒன்றையும் கிரண் பேடியிடம் அளித்தார்.
அருகில் இருந்த புதுவை நகராட்சி ஆணையர் சந்திரசேகரனை அழைத்த கிரண்பேடி, மாணவன் படிக்கும் பள்ளி குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அந்த பள்ளியில் கல்வி கட்டணச் சலுகை உள்ளது என்றும், அது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் என நகராட்சி ஆணையர் கிரண்பேடியிடம் கூறினாராம். இதுகுறித்து பள்ளி தாளாளரிடம் பேசுவதாக கிரண்பேடி மாணவரிடம் உறுதியளித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications