பெருமழை வெள்ளம்.. மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! குன்றத்தூரிலும் லீவ்
மயிலாடுதுறை: 122 ஆண்டுகளில் இல்லாத பெருமழை கொட்டித் தீர்த்ததன் காரணமாக சீர்காழி உட்பட மயிலாடுதுறை மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து, வங்கக் கடலில் கடந்த புதன்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த வியாழக்கிழமை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது.

சீர்காழியில் பெருமழை
இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரு மழை கொட்டித்தீர்த்தது. அதிபட்சமாக அம்மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் 44 செண்டி மீட்டர் பெருமழை கொட்டித் தீர்த்ததால். பெருமழையால் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளன.

வெள்ளம்
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. குடியிருப்புகள் மட்டுமின்றி விளை நிலங்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என பல பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. இதனால் மாணவ மாணவிகள் புத்தகங்களும் சேதமடைந்துள்ளன.

அமைச்சர் மெய்யநாதன்
நேற்று சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. தண்ணீர் சூழ்ந்த பகுதியாக உள்ளது. மாணவர்களின் புத்தகங்கள் சேதமடைந்து இருக்கின்றன. எனவே மாவட்ட ஆட்சியருடன் பேச வேண்டும்.

விடுமுறை
பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கு சற்று காலதாமதம் ஆகும். ஏனென்றால் அந்த அளவுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். இந்த நிலையில் மயிலாடுதுறையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை ஆட்சியர்
இதுகுறித்து மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா வெளியிட்ட அறிக்கையில், "கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் மழை நீரை பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

குன்றத்தூர்
இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இன்று (14-11-2022) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது." என அறிவித்து உள்ளார். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும்
இதனை தொடர்ந்து குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நீர் தேங்கிய 5 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உள்ளார்.

செங்கல்பட்டு பள்ளிகள்
அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, நன்மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை, வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications