புயல் அச்சுறுத்தல்.. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிப்பு
நாடா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடா புயல் எதிரொலியாக தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் புதுவை, காரைக்காலில் டிசம்பர் 1, 2 ஆகிய இரு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விட அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நாடா புயல் வெள்ளிக்கிழமை கடலூர் அருகே கரையைக் கடக்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அறிவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறியதாவது: நாடா புயல் எதிரொலியாக தமிழகத்தில் டிசம்பர் 1, 2 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இதனிடையே கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications