கோடை விடுமுறை நீட்டிக்கப்படுகிறதா?.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது.. அன்பில் மகேஷ் பதில்
சென்னை: தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 1-ம் தேதி திறக்கப்படும். அதேபோல தான் நடப்பு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது.

ஆனால் சமீபத்தியில் கோடை வெயில் தமிழகம் முழுவதும் கொளுத்த தொடங்கியது. கோடை வெயில் சுட்டெரித்த காரணத்தால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படும் என்ற தகவல் பரவியது. இந்த நிலையில் இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்து கூறியதாவது:- தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் மாதம் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ல் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications