காரைக்குடியில் அறிவியல் கண்காட்சி.. மாணவர்கள் வைத்த கலக்கல் படைப்புகள்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி காரைக்குடி மு.வி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 12.08.2016 அன்று நடைபெற்றது.
பள்ளி அளவில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றன. கண்காட்சி துவக்கவிழாவிற்கு தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து அவர்கள் தலைமை வகித்தார். மு.வி. அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக வரலாற்று துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அழகப்பா பல்கலைக்கழகத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர். அன்பழகன் அவர்கள் அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார். அழகப்பா பல்கலைக் கழக பேராசிரியர்கள் முனைவர்.ஆ. ராம்நாத், முனைவர். கே. கோவிந்தராஜன், முனைவர். என் சசிகுமார் மற்றும் அழகப்பா கலைக்கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர்கள் முனைவர். இளங்கோவன், முனைவர். ஜான் ரத்தினம், முனைவர். செந்தில்குமார் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினார்கள்.
இக்கண்காட்சியில் 6 முதல் 8 ம் வகுப்பிற்கான பிரிவில் 44 மாணவர்களும், 9 முதல் 10ம் வகுப்பிற்கான பிரிவில் 66 மாணவர்களும், 11 முதல் 12 ம் வகுப்பிற்கான பிரிவில் 26 மாணவர்களும் சுமார் 136 மாணவர்கள் பங்குபெற்றனர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் வருவாய் மாவட்ட அளவில் இம்மாத இறுதியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்தார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இராமநாதன் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் தலைமையாசிரியர்கள் சண்முகவேல் முருகன், எம். இராஜேந்திரன், எஸ். மாரிமுத்து, இந்திரா காந்தி, பீட்டர் லெமாயு மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சரவணன், சேவியர், இராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். செல்லியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கனகராஜ் அவர்கள் நன்றி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications