இனி திரையரங்குகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்!
சென்னை: சென்னையில் உள்ள திரையரங்குகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பள்ளிகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இனி திரையரங்குகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு கூடுதல் ஆணையர் ராஜேஷ்தாஸ் தலைமை வகித்தார். இணை ஆணையர் சண்முகவேல், துணை ஆணையர்கள் சரவணன், கிரி, பகலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சென்னையில் உள்ள திரையரங்குகளின் உரிமையாளர்கள், மேலாளர்கள் என சுமார் 30 பேர் பங்கேற்றனர். இதில், திரையரங்குகளுக்கு வருபவர்களை கண்காணிக்கும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும், பார்வையாளர்களை சோதனையிட்ட பிறகே அரங்குக்குள் அனுமதிக்க வேண்டும், திரையரங்குக்கு வரும் வாகனங்களும் சோதனை செய்யப்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஆனால் இதுபோன்ற சோதனைகளுக்கு பார்வையாளர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இதனால் திரையரங்கில் பிரச்னை ஏற்படுவதாகவும் திரையரங்கு உரிமையாளர்களும், மேலாளர்களும் தெரிவித்தனர்.
இதைத் தவிர்க்கும்வகையில், 'பாதுகாப்பு சோதனை கட்டாயம்' என திரையரங்கு வளாகத்தில் காவல்துறையின் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கை குறித்து மேலிடத்தில் கலந்து பேசி முடிவு எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications