வாவ்.. கமல் ட்வீட்டை விடுங்கய்யா.. இந்த "திருவிளையாடலை"ப் பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசன் இன்றும் இரண்டு டிவீட் போட்டுள்ளார். அதில் தான் பேதம் பாராமல், கட்சி சார்பற்று கருத்துக்களைப் பதிவிடுவதாக கூறியுள்ளார் கமல்.

இந்த டிவீட்டுக்கு ரசிகர்களிடையே வழக்கம் போல ஆதரவும், விமர்சனங்களும் மாறி மாறி குவிந்து வருகின்றன.

அதில் ஒரு வாதம் சுவாரஸ்யமானதாக கண்ணில் பட்டது. கமல் பாணியிலேயே இருவர் வார்த்தை விளையாட்டில் ஈடுபட்ட டிவீட்டுகள் அவை. கமல் டிவீட்டைப் பார்த்த கையோடு இதையும் படிச்சுட்டுப் போங்க.

நீர் எல்லா ஊழல் போதும் கூறியிருப்பின்

நீர் எல்லா ஊழல் போதும் குறை கூறி இருப்பின் .. பிழை கண்டறியாமல் இருந்திருப்பர்.. கூறுபவர் நக்கீரரும் இல்லை.. நீர் ஆண்டவரும் இல்லை.

ஆண்டவர்க்கேது வேலை

ஆண்டவர் ஒழுங்காய் ஆண்டிருந்தாலே ஆண்டவர்க்கேது வேலை..

ஆள்பவர் மீது மட்டும் ஏன்

ஆனால் ஆண்டவர் ஏன் ஆள்பவர் மேல் மட்டும் ஆளுமை செலுத்த எண்ணுகிறார்.. ஆண்டவர்கள் மாண்டதினாலோ???

ஆள்பவர்க்கோர் பாடம் தேவையோ!

ஆன்டவர் மாண்டபின்னர் ஆள்பவர் அடிமையானால் ஆண்டவர் ஆள்பவர்க்கோர் பாடம் சொல்ல வேண்டுமன்றோ?

திருவிளையாடலா

ஆள்பவர்கள் மாண்டவரின் அடிமையாக தானே ஆண்டுகளாக வாழ்ந்தனர்.. ஆண்டவர் அப்போது மௌனித்து இருந்தது திருவிளையாட்டா??

தீது அடாது

அடிமையாயிருப்பவர் ஆண்டவர்க்கு அடிமையாயின் விளையும் தீதினும் ஆளும் நிலை வந்தும் அடுத்தவர்க்கு அடிமையாயின் விளையும் தீது அடாததாகும்.

யாருக்கு அடிமையாய் இருப்பது

அடிமை என்பதே ஆளுமை இல்லாமை.. இதில் எவருக்கு இருந்தால் என்ன? ஆண்டவரின் கோபம் யாருக்கு அடிமையாய் இருப்பது என்றா??

குறை கூறல் ஏன்

எதற்கு அடிமையாயிருப்பதென்று. இருப்பினும் கேட்பவர் கேட்பதில் பிழையிலாத பொருட்டு கேள்வியைக் குறைகூறல் ஏன்..

Bigg Boss Tamil, Kamal hints 'five star jail is also there'-Oneindia Tamil

கேள்வியை யாம் குறை கூறேன்

கேள்வியை யாம் ஒருபோதும் குறை கூறேன்.. கேள்வி கேட்பவரையும்.. கேட்கும் காலத்தையும் .. நோக்கையும் பற்றி வினவுகிறேன்...ஆண்டவனுக்கே வெளிச்சம்!

இன்னும் தொடருது பாஸ்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal Haasan tweeted again on his Political comments today and two were indulging in war of words in the tweet, that attracted many infact.
Please Wait while comments are loading...