'கொபசெ' சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகனுக்கு எதிராக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியை தொடங்கிய நிர்வாகிகளில் பெரும்பாலானோர் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். அண்மையில் கொத்து கொத்தாக, நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறி பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியில் தற்போது சீமானுக்கு பக்க பலமாக இருப்பவர்களில் முக்கியமான நபர் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன். பொதுமேடைப் பேச்சுகளால் வழக்குகள் தொடரப்பட்டு சிறைக்கு சென்றவர் சாட்டை துரைமுருகன். திரைப்பட நடிகை மற்றும் சீமான் தொடர்பான விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தியவராகவும் கூறப்பட்டவர் சாட்டை துரைமுருகன்.
இந்த நிலையில் சாட்டை துரைமுருகனுக்கு எதிராக இன்று சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், துரைமுருகன் நடத்தும் சாட்டை யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை; அதில் வருகிற கருத்துகள்-செய்திகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்; அவற்றுக்கு நாம் தமிழர் கட்சி எந்த வகையிலும் பொறுப்பாகாது என சீமான் தெரிவித்துள்ளார்.
|
🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/IqIzAesOmS
— Duraimurugan (@Saattaidurai) April 15, 2025
நித்தியானந்தா? நயினார் நாகேந்திரன்? மோதல் என்ன?
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்களில் விசாரித்த போது, தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் நயினார் நாகேந்திரன், இஸ்லாமியருக்கு எதிரான சங்கி எல்லாம் இல்லை என்பது உள்ளிட்ட கருத்துகளை சாட்டை துரைமுருகன் பேசியிருந்தார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி, பாஜகவின் பி டீம் என விமர்சிக்கப்படும் நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பொதுவெளியில் பகிரங்கமாக பாராட்டி நற்சான்று கொடுத்ததால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்தே சாட்டை துரைமுருகன் தொடர்பாக சீமான் அறிக்கை வெளியிட்டார் என்கின்றனர்.

மேலும், பல்வேறு பலாத்கார வழக்குகளில் தேடப்படுகிற பாலியல் குற்றவாளியான சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவிடம் சாட்டை துரைமுருகன் பேட்டி எடுத்து ஒளிபரப்ப இருந்ததும் சீமானின் அறிக்கைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!











Click it and Unblock the Notifications