மக்கள் நீதி மய்யம்: குழந்தைகள் நல மையம் விளம்பரம் போல் உள்ளது...அதெல்லாம் ஒரு பேரா?... சீமான் நக்கல்
மக்கள் நீதி மய்யம் என்பது குழந்தைகள் நல மையம் விளம்பரம் போல் உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யம் என்பது குழந்தைகள் நல மையம் விளம்பரம் போல் உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அறிவித்த கட்சியின் பெயரே பிடிக்கவில்லை என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
கமல்ஹாசன் கட்சி தொடங்குவதற்கு முன்னர் நல்லகண்ணு, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்டோரை சென்று பார்த்தார். ஆனால் கமலை நேரடியாக சென்று பார்த்தவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவார்.
இதுகுறித்து சன் நியூஸ் சேனலுக்கு சீமான் அளித்த பேட்டியில் கூறுகையில், கமலை நான் சென்று சந்தித்ததாலேயே தன்மானத்தை இழந்துவிட்டதாக அர்த்தம் இல்லையே. அவர் என்னை சந்திக்க வருவதாக இருந்தது, அவர் எனக்கு சீனியர் என்பதால் நானாகவே அவரை சென்று சந்தித்தேன். கமலை நானாக சென்று சந்தித்ததால் எதையும் இழந்துவிடவில்லை. அனைவரிடமும் வாழ்த்துகளை பெற்று கமல் கட்சி தொடங்குவது என்பது மரபுதானே.

இதுதான் மரபு
அதில் தவறில்லையே. கமல் பொதுக் கூட்டத்தில் பேசியதில் எங்கள் கட்சியின் கொள்கைகள் அடங்கிய புத்தகத்தில் ஒரு துளிதான் அவர் கூறியுள்ளார். அது ஒன்றும் புதிதல்ல. நாங்கள் சொன்னதை தான் கமல் கூறியுள்ளார். கமல் கிராம தேசியம் என்கிறார், நாங்கள் சிற்றூர் மேம்பாடு என்கிறோம். நான் தெரு தெருவாக பேசி வந்தது மெர்சல் படத்தில் வந்தபோது அது பெரிதாக பேசப்பட்டது.

கமல் கட்சியின் பெயர் எனக்கு பிடிக்கவில்லை
அதுபோல் எங்களது கொள்கைகளையே கமல் போன்ற பிரபல நடிகர் கூறியதால் அது பெரிதாக பேசப்பட்டது. இடதும் இல்லை வலதும் இல்லை தான் மையம் என்று கமல் கூறுகிறார். உலகத்திலேயே நடுநிலை என்ற ஒன்று இல்லை. அது சுத்த பைத்தியகாரத்தனம். எனக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது. கமல் ஆரம்பித்த கட்சியின் பெயரே எனக்கு பிடிக்கவில்லை.

ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன
ஏதோ பிரம்மாண்டமாக அறிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்துள்ளார். ஏதோ குழந்தைகள் மருத்துவ மையம் விளம்பரம் போல் இருந்தது. கமலுக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. இந்தியனா இருப்பதா, திராவிடனா இருப்பதா இல்லை தமிழனா இருப்பதா என்ற குழப்பம் இருக்கிறது.

எரிச்சலில் அப்படி சொல்லியிருக்கலாம்
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் நாங்கள் முடிவு செய்து விட்டு வந்தோம். ஆனால் அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. நிரந்தர முதல்வர், நிரந்தர பொதுச் செயலாளர் என்பது போல் இருந்ததை பார்த்து எரிச்சலில்தான் தனது கட்சியில் தான் மட்டுமே முதல்வராக இருக்கமாட்டேன் என்று கமல் கூறியுள்ளார்.

கமல் கட்சியில் சேர வேண்டிய அவசியம் இல்லை
நான் போய் கமலை சந்தித்தபோது அவர் எதையும் பேசவில்லை. நான் போய் கமலுடன் சேர வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் மண்ணை பன்னாட்டு கூட்டங்கள் வேட்டையாடுகிறது, அதை தடுக்க வேண்டும் என்ற வெறி என்னுள் உள்ளது என்றார் சீமான்.
-
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications