தமிழ்நாட்டுக்கு தண்ணீர் இல்லையா.. கர்நாடகத்துக்கு நெய்வேலி கரண்ட் கிடையாது.. சீறும் சீமான்
தண்ணீர் தராத கர்நாடகத்துக்கு நெய்வேலியில் இருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்று சீமான் தெரிவித்தார்.
கடலூர்: தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலியில் இருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காவிரி நதி நீர் பங்கீட்டுக்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசம் கோரியது.

மேலும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்கள் இருப்பதால் வரைவு அறிக்கைக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெற முடியவில்லை என்றும் மத்திய அரசு சாக்கு போக்கு கூறியது. பின்னர் தமிழகத்துக்கு மே மாதத்துக்குள் 4 டிஎம்சி தண்ணீரை விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
எனினும் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதற்கு தமிழக விவசாயிகள் கொந்தளித்துவிட்டனர்.
'நீட்' தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் 'தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு' சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன உரையாற்றினார். pic.twitter.com/r1aOSOiLej
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) May 3, 2018
'நீட்' தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் 'தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு' சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன உரையாற்றினார்.
அப்போது சீமான் கூறுகையில் தண்ணீர் திறக்க முடியாது என கூறும் கர்நாடகத்துக்கு நெய்வேலியில் இருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும். தமிழர்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications