தமிழக மக்களை மடையர்களாக ரஜினிகாந்த் கருதுகிறார்.. சீமான் சீற்றம்
சென்னை: தமிழக மக்களை மடையர்களாக ரஜினிகாந்த் கருதுகிறார் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை கிண்டி, காந்தி மண்டபத்தில் காமராஜர் நினைவு தினத்தையொட்டி, அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சீமான். இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய சீமானிடம், பிறந்த நாள் அன்று கட்சி துவங்குவதாக ரஜினிகாந்த் கூறியுள்ள நிலையில் வெளிநாடுகளில் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதனால் கோபமடைந்த, சீமான் கூறியதாவது: ரஜினிக்கு அதில் ஒரு பொழுதுபோக்கு. மோசஸ், நபிகள் நாயகம் மாதிரி திடீரென 10 கட்டளைகள் வெளியிடுவார். நீங்களும் (ஊடகங்களும்) பெரிதாக பேசுவீர்கள்.
தமிழ்நாட்டு மக்களை எந்த அளவுக்கு மடையர்கள் என்று இவர் கருதுகிறார் என்பதை அறிவார்ந்த தமிழ் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். கனவு வந்தால் காலையில் ஒரு அறிக்கை, நினைத்தால் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடுவார்.
எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 02-10-2018 காலை 10 மணியளவில் சென்னை, காமராசர் நினைவிடத்தில் உள்ள திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.https://t.co/Xe5Lkcf4Wu pic.twitter.com/iEPXv547Ct
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) October 2, 2018
ஆரம்பியுங்கள், வாருங்கள்.. ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன என்று தெரியவில்லை. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
"முதலாளிகளுக்காகவே அரசுகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் இருந்து எடுத்தால் தான் தாமிரப் பற்றாக்குறை தீருமா?" என்று ஸ்டெர்லைட் தொடர்பான கேள்வியொன்றுக்கு சீமான் பதிலளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications