செல்பி மோகம்: கெலவரப்பள்ளி அணையில் விழுந்து 2 பேர் பலி.. காப்பாற்ற முயன்ற கல்லூரி மாணவரும் மரணம்!
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் தவறி விழுந்து 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் தவறி விழுந்து 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையால் தமிழக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக பெரும்பாலான அணைகள் மளமளவென நிரம்பின. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையும் நிரம்பியுள்ளது.

தவறி விழுந்த இளைஞர்
இந்நிலையில் கெலவரப்பள்ளி அணையில் வடமாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் செல்பி எடுத்தனர். அப்போது ஒரு இளைஞர் தவறி அணையில் விழுந்தார்.

2 பேர் பலி
இதனைக்கண்ட அங்கிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் அணையில் விழுந்தவரை காப்பாற்ற தானும் அணையில் குதித்தார். இதில் 2 பேரும் உயிரிழந்தனர்.

2 பேர் தப்பியோட்டம்
செல்பி எடுத்தப்போது உடனிருந்த மற்ற 2 பேரும் தப்பியோடிவிட்டனர். அவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பலியான 4 வயது சிறுவன்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் காவிரியாற்று பாலத்தில் தந்தை செல்பி எடுத்த போது 4 வயது சிறுவன் ஆற்றில் விழுந்து உயிரிழந்தான். இந்நிலையில் கெலவரப்பள்ளி அணையில் செல்பி எடுத்து 2 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

சோகம்
மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அணைகள் மற்றும் ஆற்று ஓரங்களில் செல்பி எடுக்க தடைவிதித்துள்ளனர். ஆனால் அவற்றையெல்லாம் கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாமல் செல்பி மோகத்தால் உயிரை மாய்த்துக்கொள்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications