ஜிஎஸ்டி வரியை இப்பவே கொண்டு வந்தா அக்கப்போரு தான் வரும்- சொல்கிறார் பொர்க்கி புகழ் சு.சுவாமி
ஜிஎஸ்டி வரியை இந்த ஆண்டே அமல்படுத்துவதன் மூலம் பேரடி விழும் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்ரமணியன் சாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜிஎஸ்டி வரியை ஜூலை 1 முதல் விதிப்பதால் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்ரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
நாடு முழுவதும் அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே வரி விதிப்பதற்கான ஜிஎஸ்டி முறை ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்தும் தேதியில் எந்த மாற்றமுமில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார்.

சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்துவதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. கடந்த சனிக்கிழமை தங்கம், ஜவுளி, காலணி, பிஸ்கட்ஸ், மற்றும் பீடி உள்ளிட்ட ஆறு பொருட்களின் வரி விகிதங்கள் முடிவு செய்யப்பட்டன.
பாஜக ஆளும் மாநில சட்டசபைகளில் ஏற்கனவே ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டு விட்டன. இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாரும் விரைவில் ஜிஎஸ்டி மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றார்.
அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக வரியும், பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பக்கம் மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவது குறித்த பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்ரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
GST roll out be on July 1 but of 2019.A huge risk if implemented before 2019 given the state of preparedness. It could become our Waterloo.
— Subramanian Swamy (@Swamy39) June 5, 2017
அதில், ஜிஎஸ்டியை ஜூலை 1 முதல் அமல்படுத்தலாம் ஆனால் இப்போதல்ல 2019ல் என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இந்த ஆண்டு முதலே அமல்படுத்தினால் மாநிலங்கள் பாதிக்கப்படும். ஜிஎஸ்டி வரிக்கு ஏற்ப மாநிலங்கள் தயாராகவில்லை, இந்த நிலையில் ஒரே நாடு ஒரே விதி முறையை அமல்படுத்தினால் மாநிங்களில் அக்கப்போரு தான் வரும் என்றும் அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஒரு பக்கம் ஜிஎஸ்டி வரியால் நாடு முன்னேறும் என்று பாஜக கூறும் நிலையில், அந்தக் கட்சியின் சுப்ரமணியன் சுவாமியே இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications