தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் - அரசாணை வெளியீடு
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டது. அரசாணைப்படி, ஊராட்சி பேரூராட்சி, நகராட்சி, மட்டுமல்லாது 12 மாநகராட்சிகளுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் பழங்குடியின மக்களுக்கு சுழற்சி முறையில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சென்னையில் 200 வார்டுகளில் ஒரு இடத்தில் கூட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கும் எதிராக இருப்பாதால் இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்து விட்டு சுழற்சி முறையை பின்பற்றி முறையாக இடஒதுக்கீட்டு பின்பற்ற வேண்டும் எனக் கூறி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பு வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போதைய உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் அக்.,24 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த அரசாணையின்படி, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் 12 மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை தனி அதி்காரிகள் கவனிப்பார்கள். அவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகளை கவனிப்பார்கள். உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் நடைபெறும் வரையில் இந்த தனி அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications