சேமிப்புக்கான தண்டனையாக எல்ஐசி காப்பீடுக்கு சேவை வரி விதிப்பதா?: வைகோ
சென்னை: வாழ்நாள் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்கின்ற பாலிசிதாரர்களிடம் 14.5 சதவிகிதம் சேவை வரி வசூலிப்பது, சேமிப்புக்காக விதிக்கப்படும் தண்டனையே என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சேவை வரியை ரத்து செய்து, முன்பு இருந்த 80 சி பிரிவின் கீழான வரிவிலக்கு மீண்டும் தரப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

இந்திய அரசு பொதுத்துறைக்குப் பெருமை சேர்ப்பது ஆயுள் காப்பீட்டுக் கழகம். இன்று எல்.ஐ.சி. வழங்கியுள்ள தனி நபர் பாலிசிகள் மற்றும் குழு காப்பீட்டுப் பாலிசிகளின் எண்ணிக்கை 40 கோடிகள் ஆகும். உலகில் இவ்வளவு பாலிசிகளை வைத்துள்ள நிறுவனம் வேறு எதுவும் இல்லை.
அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளில் வாழ்நாள் காப்பீட்டுத் திட்டங்கள் மீது சேவை வரி இல்லை. ஆனால் இந்தியாவில், முதன் முறையாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2014 ஜனவரி முதல் எல்.ஐ.சி. பிரிமியத்திற்கு 12 சதவிகித சேவை வரி விதிக்கப்பட்டது. அடுத்து வந்த பா.ஜ.க. ஆட்சியில் 2015 ஜூன் முதல் 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இப்போது ஸ்வர்ச் பாரத் செஸ் 14.5 சதவிகிதம் வசூலிக்கிறது.
கடந்த 60 ஆண்டுகளாக வேகமாக முன்னோக்கிச் சுழன்றுள்ள எல்.ஐ.சி. என்னும் சக்கரத்தை பின்னோக்கித் திருப்புகின்ற முயற்சியே சேவை வரி ஆகும். தங்கள் வாழ்நாள் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்கின்ற பாலிசிதாரர்களிடம் 14.5 சதவிகிதம் சேவை வரி வசூலிப்பது, சேமிப்புக்காக விதிக்கப்படும் தண்டனையே ஆகும்.
ஆயுள் காப்பீட்டுச் சேவை வரி மூலம் அரசாங்கத்திற்குக் கிடைப்பது ரூபாய் 6,504 கோடி. ஆனால், 2014-15 இல் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் மூலம் ரூபாய் 62,398 கோடிகளை அரசாங்கம் இழந்திருக்கின்றது. இதனால் கடந்த ஓராண்டில் 29 பேர் பில்லியனர்கள் பட்டியலில் புதிதாக இடம்பிடித்து இருக்கின்றார்கள். உலகச் சந்தையில் பெட்ரோல் விலை குறைந்தாலும், இங்கே கலால் வரி போட்டு குறையாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
ஆனால், உலகச் சந்தையில் பெட்ரோல் விலை கூடினால் இறக்குமதி சமன்பாடு எனச் சொல்லிக்கொண்டு பெருந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் பெட்ரோல் தருகிறார்கள். அந்தச் சலுகை சாதாரண பொதுமக்களுக்குக் கிடையாது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த வகையில் ரூபாய் 17 ஆயிரம் கோடிகளை சாதாரண மக்களிடமிருந்து அரசு பறித்திருக்கிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழம் 11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூபாய் 7 இலட்சத்து 4 ஆயிரம் கோடிகளைத் தந்தது. 12ஆவது திட்ட காலத்தில் முதல் மூன்று ஆண்டுகளிலேயே ரூபாய் 7 லட்சத்து 52 ஆயிரம் கோடிகளைத் தந்துள்ளது. ரயில்வே மேம்பாட்டுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியைத் தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இத்தகைய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். காப்பீட்டுத் திட்டங்கள் மீதான சேவை வரியை ரத்து செய்து, முன்பு இருந்த 80சி பிரிவின் படி வரிவிலக்கு மீண்டும் தரப்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications