மருந்து வியாபாரிகள் கடையடைப்பு நாளை ஒத்திவைப்பு - மாநில தலைவர் பேட்டி

நாளை நடைபெறவிருந்த மருந்து வியாபாரிகள் கடையடைப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: நாளை நடக்க இருந்த மருந்து வியாபாரிகள் கடையடைப்பு ஒத்திவைக்கப்படுவதாக அதன் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் நெல்லுக்காரத் தெருவில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கங்களின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

Shop blocking adjournment for pharmaceutical merchants

இந்த கூட்டத்திற்கு காஞ்சீபுரம் செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ வணிக சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில தலைவர் ராமச்சந்திரன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசின் செயலை கண்டித்து வரும் ஏப்ரல் 2-ந் தேதி கடை அடைப்பு போராட்டம் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டம் வணிகர்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஒத்தி வைக்கப்படுகிறது.

மேலும் அனைத்து கட்சிகள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்க பிரதிநிதிகளிடம் கலந்து பேசி கடையடைப்பு போராட்டம் நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜா, மண்டல செயலாளர் மூர்த்தி, நிர்வாக செயலாளர் சுந்தரமூர்த்தி,மொத்த வணிக பிரிவு செயலாளர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+