கலாம் மறைவு.. தமிழகத்தில் நாளை கடைகள் அடைப்பு.. கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் துக்கம் அனுசரிப்பு
சென்னை : குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை (ஜூலை 30) கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை இந்த கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தவரும், விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் பிதாமகனுமான அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜூலை 30-ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையில் இணைந்த வணிகர்கள் கடைகளை அடைக்க வேண்டும்.
வணிகர்கள் தங்கள் கடைகளை அடைப்பதுடன், அந்தந்தப் பகுதிகளில் மௌனமாக ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது..
நாட்டு மக்கள் அனைவரின் அன்பையும் பெற்றவர் அப்துல் கலாம்.அவரது உடல், வரும் 30-ஆம் தேதி ராமேசுவரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தும் வகையில் ஜூலை 30-ஆம் தேதி காலை 6 மணி முதல் நல்லடக்கம் முடியும் வரை வணிகர்கள் கடைகளை அடைக்க வேண்டும்.
இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களும், வணிகர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை, கடலுக்குச் செல்வதில்லை என்று ராமேசுவரம் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
அப்துல் கலாம் திங்கள்கிழமை காலமானதையொட்டி, துக்கம் அனுசரிக்கும் வகையில், ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்குச் செல்லாமல் இருந்து வருகின்றனர். எனவே, இந்தப் பகுதிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், அவரின் உடலை நல்லடக்கம் செய்யும் வரை மீன்பிடிக்கச் செல்வதில்லை என மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications