அவரை சேர்த்துக்கிட்டா மக்கள் காரி துப்புவாங்க - சொன்னது நிதி

கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற நினைப்பவரை சேர்த்துக்கிட்டா மக்கள் காரி துப்புவார்கள் என்று நிதியான அமைச்சர் கூறியதாக கிரீன்வேஸ் சாலை பக்கம் கிசுகிசுக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயிலுக்கு போயிட்டு வந்ததுக்குப் பிறகு அவரின் ஆட்டம் அதிகரித்து விட்டது என்பது அமைச்சரவையில் இருப்பவர்களின் புகார். எங்கே நம்மை ஓரங்கட்டி விடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள் சில அமைச்சர்கள். எனவேதான் அவரை கட்சியில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆட்சியிலும், கட்சியிலும் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவங்க யாரையும் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று சொன்னதன் பிறகே தொகுதியில் அமைச்சர்களுக்கு மரியாதையே கிடைத்துள்ளது. இதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர்கள் நினைக்கிறார்கள்.

Shut the door to poesgarden party says Minister

மணியான அமைச்சர்களோ அவரை சேர்த்துக்கொள்ளவே கூடாது என்று கூறி வருகின்றனர். மணியான அமைச்சருக்கு அதிகம் சப்போர்ட் செய்வது நிதியான அமைச்சர்தானாம்.

எல்லோரும் கூடி கூடி பேசினாலும் அமைச்சர்கள் ஆலோசனை எல்லாம் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவரை சேர்த்துக்கொள்ளவே கூடாது என்பதுதானாம்.

அவரை போய் சந்தித்து விட்டு வந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் மணியான அமைச்சர்களிடம் பேசிய நிதியான அமைச்சர், என்ன நடந்தாலும் சரி மறுபடியும் அவங்க கட்டுப்பாட்டுக்குள்ள கட்சி போயிடக்கூடாது. அவரை மட்டும் சேர்த்துக்கிட்டோம்னா கட்சிக்காரங்க மட்டுமில்லாம மக்களும் நம்ம முகத்துல காரி துப்புவாங்க என்று கூறினாராம். அதை அனைவருமே ஆமோதித்தார்களாம்.

இவங்க பேசிக்கிறதை பார்த்தா கட்சி மறுபடியும் சில்லு சில்லா சிதறிடும் போல இருக்கே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+