சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேரின் பின் மண்டையிலும் பலத்த காயம், அது கொலையே: பெற்றோர்
விழுப்புரம்: தற்கொலை செய்து கொண்ட எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேருக்கும் பின் மண்டையில் அடிபட்டுள்ளதால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கல்லூரி நிர்வாகத்தால் பாலியல் கொடுமை உள்பட பல கொடுமைகளுக்கு ஆளாவதாகக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 மாணவிகளின் பின் மண்டையில் பலத்த காயம் உள்ளது. அது எப்படி தற்கொலை செய்து கொண்டால் சொல்லி வைத்தது போன்று 3 பேருக்கும் ஒரே மாதிரியாக பின் மண்டையில் அடிபடும் என்று அவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எங்கள் மகள்கள் தற்கொலை செய்யும் ஆட்கள் இல்லை. அவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் தான் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று மாணவிகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்ட எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரிக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இதற்கிடையே முதலில் மாணவி சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவிகள் இறந்தது தொடர்பாக கல்லூரியின் தாளாளரின் மகன் சுவாக்கர் சர்மா, விடுதி பணியாளர்களான சுமதி (34), லட்சுமி (37), கோட்டீஸ்வரி (24) ஆகிய 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications