ஜல்லிக்கட்டுக்காக.. சிங்கப்பூரிலிருந்து ஒரு வித்தியாசமான சமர்ப்பணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டை ஆதரித்து உலகம் முழுவதும் தமிழ்க் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இந்த நிலையில் நமது சிங்கப்பூர் வாசகி அனுராதா என்பவர் வித்தியாசமான முறையில் ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

எப்எம் வானொலியில் நிகழ்ச்சி வழங்கும் பாணியில் அவர் ஒரு ஜல்லிக்கட்டு ஆதரவு செய்தியை வெளியிட்டுள்ளார். அது...

Singapore fan's novel way to support Jallikattu

ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனம்
என்று சொன்னவரிடம் நான் தள்ளி நிற்கிறேன்..
அவரின் வாயிலிருந்து மாட்டு கறி வாடை அடிக்கிறது! - (எங்கோ படித்தது! )

நமது கலாசாரத்தையும், நமது உரிமையையும் மீட்க போராடும் ஒவ்வொறுவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.(சில சினிமா பாடல் வரிகளை மேற்கோள் காட்டி)

கோடியில வீட்ட கட்டுனாலும் எம்மக்கா நீங்க பசுவ உள்ள விட்டு தானே நீங்க நுழைவீக!
அதுகளுக்கு போக மிச்சம்தானே மக்கா உம் வயிற்றுக்கு!

"நெல்ல நான் திங்க ..வைக்கோல நீ தின்ன..
அரிசிய நான் தின்ன..தவிட நீ தின்ன..
சோற நான் தின்ன..கழனி நீ குடிச்ச..
நான் வாழ நீ வாழ்ந்த
இப்போ நீ வாழ நான் சாக மாட்டேனா! - (நன்றி - இணையதளம்)"

என வாழ்ந்த மக்கா நீங்க காளைய கொடுமை பண்றதாவும்..காளையால் நமக்கு ஆபத்துன்னு தடை வாங்கியிருக்க, இது எப்படி இருக்குன்னா?

"பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்? ..
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும் நான் செய்த பாவம் என்ன?
விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ..
எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ!
ஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு பார்வையில்லை..
(விடுகதையா இந்த வாழ்க்கை)

அலங்காநல்லூரில் பற்றி கொண்ட இந்த போராட்டம் எனும் தீப்பொறி..நமது மாணவ செல்வங்களுக்கு கொழுந்து விட்டு எரிந்து.. ஒவ்வொரு வீட்டிலிருந்தும்,

"சிங்கம் ஒன்று புறப்பட்டதே
அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

உன்னோடு ரத்தம் சிந்த
உண்மையுள்ள கூட்டம் உண்டு
உன்னோடு ரத்தம் சிந்த
உண்மையுள்ள கூட்டம் உண்டு
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்..

பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான் இருப்பான்
வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான் எடுப்பான்
கெட்டவங்க முகமூடி கிழிப்பான் கிழிப்பான்
நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான் மதிப்பான்
பகையே நீ துள்ளாதே
இவன் போகும் வழியில் நில்லாதே
சீறும் சிங்கம் இவனல்லோ
இவனை புழுவாய் நீ எண்ணாதே
தீமை விலகிட நன்மை பெருகிட (சிங்கம் ஒன்று..)

நேற்று வரை சாதாரண மனிதனா இருந்த நீங்க! இன்று ஊருக்ககாக..நாட்டுக்காக போராடுவதால் புனிதன் அல்லவா?

"யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
நேற்றுவரைக்கும் மனிதனப்பா..
இன்றுமுதல் நீ புனிதனப்பா.." (வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா..)"

நமது உரிமையையும் கலாசாரத்தையும்! மீட்க போராடும்!
நீங்கள் ஒவ்வொருவரும் அழகிய தமிழ் மகன்(ள்) தானே!

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக் கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக் கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஓ ஹே தோழா... முன்னால் வாடா...
உன்னால் முடியும்...

நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...
நீ இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும்
அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே...
நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா
நியாயம் காயம் அவனே அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல்"

ஹே தோழா முன்னால் வாடா உன்னால் முடியும்.. எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே! -(எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே)

உங்களை உலகம் உற்று பார்த்து கொண்டு இருக்கிறது! உங்கள் போராட்டம் ஒரு புனித போராட்டம்!
இரவு பகல் பாராமல் போராடும் எங்(YOUNG) காளைகளே! உங்கள் மனதில்..

"இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே..
வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்"

என்றுதானே உங்கள் எண்ணோட்டம் ஓடி கொண்டு இருக்கிறது !

உங்களுக்கு வெற்றி நிச்சயம்! இது வேத சத்தியம்!

கடல் கடந்து வாழ்ந்தாலும்..மனசு மெரினாவை சுற்றி அலை பாயுதே!

வாழ்த்துக்களூடன்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
This is our Singapore fan's novel way to support Jallikattu and its massive protest in Tamil Nadu.
Please Wait while comments are loading...